உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




132

-

பாவாணர் கடிதங்கள் பாடல்கள் வைத்த வியாச விளக்கக் குறிப்புகளை யெல்லாம் தொகுத்து முறைப்படுத்திஅச்சுக்கேற்ற திருத்தப்படிவமாய் எழுதியுள்ளேன். கண்டிப்பு :

நானே மார்ச்சு மீ வெளியிடலாமென்றிருக்கிறேன். நீங்கள் வார முறையில் (Royalty System) வெளியிடுவதானால் வெளியிடலாம். உரிமை விலை முடியாது. நூல் பார்க்க விரும்பினாலும் நேரில்தான் பார்க்கவேண்டும். தபாலில் அனுப்ப முடியாது. அச்சும் இங்கேதானாக வேண்டும். கிரௌன் அளவில் 100 பக்கத்திற்குக் குறையாது வரும். அங்கீகாரம் இல்லாமலே தமிழ்நாடெங்கும் விலையாகத் தக்க சிறந்த முறையில் உள்ளது. விரும்பின் உடனே ஒழுங்கு செய்க."10

வேர்ச்சொற் சுவடி :

“வேர்ச்சொற் சுவடி எழுதி முடிந்தது

அடிமை வழக்கு :

66

2211

"இம் மாதத்திலேயே இன்னும் இருவாரமுள. அடுத்த மாதம் 25உ தான் (அகநானூறு) மாநாடு. ஆகையால் யாரையும் கேட்டு ஏற்படுத்தப் போதிய காலமுளது. இங்ஙனமிருக்க என்னையே வற்புறுத்தப் பார்ப்பது அடிமை வழக்குத் தொடுத்தாற்போலிருக்கிறீர்கள். ஆனால் தாங்கள் தமிழுக்குச் செய்யும் தொண்டிலும் யான் செய்வது சிறந்ததென்பதை அண்மையில் அறிவீர்கள். தமிழுக்காக வேறு யாரேனும் தாண்டியற்றுவாரானால் யான் முற்றிலும் கவலையற்றிருப் பேன். இந்திச் சனியனும் பார்ப்பனர் தீமையும் இன்னும் ஒழிந்தபாடில்லை. எழுதவேண்டுமென்றால் பொருளில்லை; உதவுவாருமில்லை.2

இசைப்பாடல்:

“திருவள்ளுவர் பஜனைக் கீர்த்தனம் 7 இயற்றி இதனோடு விடுத்துள்ளேன். ஓய்வின்மையால் இதற்குமேல் இன்று முடிய வில்லை. இன்னும் 7 சிறந்த மெட்டுகளில் சிறப்பாக யியற்றி விடுத்தல் கூடும். எல்லாக் கீர்த்தனையும் சேர்த்துத் ‘திரு வள்ளுவர் பஜனைக் கீர்த்தனம்' என்றே ஓர் புத்தகம் கழக வாயிலாய் வெளியிட்டு எளிய விலைக்கு விற்க.13

10. 13-11-35 (வ.சு.)

12. 18-10-40 (வ.சு)

11. 14-9-40 (வ.சு.)

13. 28-1-38 (வ.சு.)

ரு