உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன் மொழி நூல் :

tem)

66

133

‘எனது நூல்களையெல்லாம் வார முறையில் (Royalty sys- வெளியிடுவீர்களானால் எனக்கும் உங்கட்கும் வருவாயும் தமிழுக்குப் பெருமையும் உண்டாகும். இதைத் தீர எண்ணிச் செய்க. எனது மொழி நூலை விரைந்து வெளியிட முயற்சியிங்குள்ளது.

காலம் -தமிழே :

66

இ ங்குள்ள வடமொழிச் சங்கத்தின் ஆண்டு விழாவில் அவைத் தலைவர் 'காலம்' என்பது 'வடச்சொல்' என்றார். யான் அது 'தென் சொல்லே' யென்று விரிவாய் விளக்கிய கட்டுரை யொன்று எங்கள் பள்ளிக்கூடச் செய்திச் சுவடியில் இம் மாதம் வெளி வந்துள்ளது. அதை இரண்டொரு நாளில் அனுப்புவேன். செல்வியில் வெளியிடலாம். தமிழ்நாட்டில் வழங்கும் பழ மொழிகளை யெல்லாம் தொகுத்து அண்மையில் வெளியிடப் போகிறேன். ஆகையால் விரிவான முறையில் பழமொழிப் புத்தகம் உங்கள் அண்ணியார் வெளியிடின் அவர்களுக்குத்தான் இழப்பாகும். இதை முன்னரே தெரிவிக்க!

தமிழ் விடுதலைச் சுவடி :

14

"தமிழ் விடுதலைக்கென்று அண்மையில் ஒரு சுவடி வெளி வரும். அது ஊதியம் அற்றது. அதன் செலவை முழுவதுமாவது அதிற் பாதியாவது தமிழ்ப் பாதுகாப்புக்காக நிதியிலிருந்து ஒத்துக் கொண்டால் நலமாயிருக்கும்.15

ஆவணம்

"குமரிநாட்டு வரலாறு, நமது உரிமையைப் பெறுதற்கு ன்றியமையாத ஆவணம். இதை அறிந்துதான் எனது எம்.ஒ.எல். இடு நூலைப் பார்ப்பனர் தள்ளிவிட்டனர். நமது அறிஞர் கழகம் பெரு வேலை செய்து பெரும் பெயரடையப் போகிறது. முதலாவது நாம் வெளியிட வேண்டியது பழந்தமிழ்ச் சரித்திரம்.. அதை மார்ச்சுக்குள் எழுதி முடிக்கச் செய்து புறநானூற்று மாநாட்டின் பின் அறிஞர் கழகச் சார்பில் வெளியிட்டுவிட வேண்டும். பின் இசைத் தமிழ் மாநாடொன்று கூட்ட வேண்டும். அதில் வரகுண பாண்டியன் எழுதிய அரிய இசைத் தமிழ் விளக்கத்தை வெளியிட முடிவு செய்ய வேண்டும். விபுலானந்தர் நூல் 14. 10-11-39 (வ.சு.) 15.16-10-40 (வ.சு.)