உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




134

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

தவறும் பார்ப்பனர்க்குச் சார்புமானது. (இதைப் பின்னர் விளக்குவேன்) அதன்பின் என் மொழி நூலின் பிற மடலங்களை வெளியிட ஏற்பாடு செய்ய வேண்டும். அறிவியல் நூல்களையும் பல்கலை நூல்களையும் தக்க அறிஞரைக் கொண்டும் ஆக்குவிக்க வேண்டும். ஒரு விரிவான சொல்லியலகராதியும் வேண்டும். அகராதி மாதிரியும், சுட்டு விளக்கச் சுவடியும் பின்னர் வரும்.

கோடைக்கானல்:

“அடுத்த மீ 16உ போல் கோடைக்கானல் சென்று சூன் முதல் வாரம் மீளலாமென்றிருக்கிறேன். மொழி நூல் பற்றி ஆங்கிலத்தில் 3 சொற்பொழிவாற்றுவேன்”16

மாநாட்டுப் பொழிவாளர்:

புறநாநூற்று மாநாட்டை ஏப்பிரலில் வைப்பதற்கான முயற்சியைத் தளராது செய்க. திருச்செங்கோட்டிலுள்ள புலவர் உலகவூழியரையும் சலகண்டபுர வரதநஞ்சைய பிள்ளை அவர்களையும் இயலுமாயின் இடமிருப்பின் புறநானூற்றுச் சொற்பொழிவாளராகச் சேர்த்துக் கொள்க. புலவர் சரவண முதலியாரை மட்டும் எங்ஙனமும் இசைவிக்காது விடற்க. பதிற்றுப்பத்திற்குச் சேர நாட்டியல்பறிந்த ஆறுமுக முதலியாரை யும் உலகவூழியரையும் தப்பாது சேர்த்துக் கொள்ளலாம். தமிழறிஞர் கழகம் ஒன்றே தமிழுக்கு ஆக்கம் தேடக் கூடும். ஆகையால் அதற்கானவற்றைத் தளராது செய்க. இன்று யான் தேர்வுப் படிப்பில் ஆழ்ந்திருப்பதால் பிறபின்.7

சொல்லயலகராதி :

"சொல்லியலகராதி மாதிரியும் உடன்வரும். தமிழாக் கத்திற்கின்றியமையாத சில திட்டங்கள் எண்ணியுள்ளேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியாராய்ச்சித் துறையில் பெரிய பண்டிதர் பதவிக்கு வேண்டுகோள் விடுத் திருக்கிறேன்.”18

போர்ப் பாடலாசிரியரின் :

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எனக்கு வேலையும் கிடைக்கவில்லை. பதிலுமில்லை. தற்போது வெற்றி மாளிகையில்

16.16-1-43 (வ.சு.)

18.21-4-43 (வ.சு.)

17.4-2-43 (வ.சு.)