உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

135

போர்ப்பாடலாசிரியரின் வேலைக்கு வேண்டியிருக்கிறேன். திரு. கே.எம். பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடற்றுறையில் மாகாணத் தலைவர். அவர்களுக்கும் ஒரு திருமுகம் எழுதி யிருக்கிறேன். அவர்கள் மனம் வைத்தால் 100 ரூக்கு எனக்கொரு வேலை கொடுக்கலாம். அன்பு கூர்ந்து உடனே அவர்களிடம் சென்று ஒரு வேலை கிடைக்கச் செய்க. தற்போது எனது வருவாய் போதாமல் வருந்துவதோடு தமிழ் முன்னேற்ற முயற்சியும் தடைப்படுகிறது.

பழமொழி அகராதி :

19

"பழமொழியகராதி பல்லாண்டு பாடுபட்டுத் தொகுத்தது. முன் அச்சுக்கு வந்தவை 8000உம், வராதவை 5000உம் ஆக மொத்தம் 13000 உள்ளன. தமிழின் வளர்ச்சிக்குத் தக்க தமிழ்ப் புலவரைத் தாங்குதல் இன்றியமையாதது.

உடனே புறப்பட இயலாது:

66

"20

நாளைக்கு அல்லது நாளை நின்று சம்பளம் வாங்க வேண்டியது இருப்பதாலும், வண்ணான் வெள்ளை கொண்டு வர இரண்டொருநாட் செல்லுமாதலாலும் சனிக்கிழமை (5 ஆம்உ) மறைமலையடிகள் தலைமையில் கோபிச் செட்டி பாளையத்திற் பேச வேண்டியிருப்பதாலும் உடனே புறப்பட யலாது. திங்கட்கிழமை சென்னைக்குப் புறப்படலாம்.

"(கல்லூரியில்) வாரம் 10 மணி வேலையேயாதலால் போதிய ஒழிவுண்டு

இடர்நீக்க வழிதுறை :

"21

யான் சனுவரி 5ஆம்உ சென்னையில் நடைபெறும் பல்கலைக் கழகத் தமிழ்க் கலைக் குழுக் கூட்டத்திற்குப் போவதனால் தமிழுக்கு அண்மையில் ஏற்படவிருக்கும் பேரிடரை நீக்கும் பொருட்டுச் சில இன்றியமையாத வழி துறைகளை வகுக்குமாறு தவறாது அன்று சென்னைக்கு வந்திருக்கக் கேட்கின்றேன். (அந்நாளில் கழக ஆட்சியாளர் இருப்பு நெல்லைத் தலைமை நிலையமேயாம்.)

19.6-7-43 (வ.சு.)

21. 2-5-45 (621.&.)

20.30-4-45 (வ.சு.)

22.28-12-45 (வ.சு.)