உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




136

மறதி :

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

"யான் மீளும்போது ஒரு சல்லடத்தை (Shirt)க் கழகக் கூடத்துப் பாகைமாட்டியில் விட்டுவிட்டு வந்துவிட்டேன். அதைட்ச சேமமாய்ப் பார்த்துக் கொள்க.

வேலை வேட்டம்:

“எங்கள் அக்கா மகன் ஒருவன் 18 அகவையான். பள்ளி யிறுதி தவறினவன். என்னிடமிருக்கிறான். அவனுக்குக் கழகத்தில் வேலை கிடைக்குமா?கிடைப்பின் ஊதியம் எவ்வளவு?23

நூலில் புதுச்சேர்க்கை

66

'நாள்தோறும் புதுப்புதுக் கருத்தெழுவதால் பலநாட்கு முன்னர் எழுதிய நூலைப் பார்வையிட்டுச் சேர்க்க வேண்டிய வற்றைச் சேர்த்துக்கொண்டு வருகிறேன்

அயல்நாட்டினர் தமிழ்க்கல்வி :

தள

தமிழ்நாட்டில் ஊ ஊழியஞ் செய்யும் அயல்நாட்டு மத ழியர்களுக்குப் பயன்படுமாறு Idioms and Phrase in Tamil with English rendering என்னும் நூல் முன்பே எழுதி வைத்திருக் கிறேன்.

25

இடுநூல் :

இம்மாதம் 25ம் வரை எழுத்துவேலை இருக்கிறது. அதன் பின் எம்.ஓ.எல் இடுநூலை எழுதவேண்டும். சனுவரி 15க்குள் முடிந்துவிடும்.2

26

இடுநூல் விரைந்து வரைதல் :

சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஓ.எல் திட்டம் நீக்கப் பட்டுவிட்டது. 1948க்கு முன்பு இடுநூல் விடுத்துத் தவறியவர்க்கு மட்டும் 1950 சனுவரிக்குள் இறுதி வாய்ப்புள்ளது. அதை உடனே பயன்படுத்திக் கொள்ளவேண்டுமாதலால் ஓர் இடுநூல் விரைந்து வரைந்து வருகிறேன். சனுவரி 15க்குள் முடிந்து விடும்.27

23.6-1-47 (வ.சு.)

25. 21-4-49 (வ.சு.)

27.23-12-49 (வ.சு.)

24.28-12-48 (வ.சு.)

26.2-4-49 (வ.சு.)