உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

எளிய உணவு :

66

137

இருவகைக் கரணங்களும் மிகுதியாய்த் தொழில் செய்யும் போது பொது முறையான எளியவுணவு போதவில்லை'

அச்சு :

66

இந்நெளி கோடிட்ட சொல் சாய்ப்பெழுத்திலும் (Ital- ics) இந்நேர் கோடிட்ட சொல் தடியெழுத்திலும் இருத்தல் வேண்டும்..

மறதி

66

இங்கு வந்தபோது கண்ணாடியையும் சீப்பையும் அங்கு விட்டு விட்டு வந்துவிட்டேன். கூடத்திலிருக்கும். போற்றிவைக்க. காவற்காரனுக்கு என் கணக்கில் உடனே 4 அணா கொடுத்து டுக. நான் புறப்பட்டபோது அங்கில்லாததால் கொடுக்க வில்லை”28

தனித்தமிழ் இணைப்பு :

"நம்மை இணைத்துக்கொண்டிருப்பது தனித்தமிழ்ப் பற்றேயன்றி இந்தப் பற்று வரவு கணக்கன்று. நான் பொருளையே கவனிக்கிறதாயின் முன்னமே விலகியிருப்பேன். தனித்தமிழ்ப்

பற்றும் இருந்திருக்காது.

கட்டுரை இலக்கணம் :

66

இன்று எழுதுவதற்கு உயர்தரக் கட்டுரை இலக்கணம் என்றும், கட்டுரை வரைவியலுக்கு எளிதரக் கட்டுரை இலக்கணம் என்றும் பெயரிட விரும்புகிறேன்”29

குறிக்கோள் :

“தனித்தமிழ்தான் என் முதற் குறிக்கோள்.

நலத்தகு முயற்சி :

பல

“உங்கள் முயற்சியாலும் என்புலமையாலும் தமிழுக்கும் தமிழினத்திற்கும் பெருநன்மை விளைதற்கேதுவான முயற்சிகள் இன்னும் ஈராண்டிற்குள் செய்யப்படவிருக்கின்றன. உங்கட்கும் தமிழ்ப்பற்றிருப்பினும் அது வணிக முறைப்பட்டது.

28.26-9-49 (வ.சு.)

29.22-2-50 (வ.சு.)