உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




138

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

எனதோ பெரும்பாலும் கலைமுறைப்பட்டது. ஆகையால் கழகத்தொடு எனக்குத் தொடர்பு என்றும் இருந்துகொண்டு தானிருக்கும். கணக்கு மட்டும் நெஞ்சறியவும் கடவுள் சான்றா கவும் நேர்மையாக நடந்து கொண்டால் என் மனத்தை ஒருவரும் மாற்றமுடியாது. கணக்கைப் பார்க்க வேண்டியதில்லை. சொல்லே போதும். எனக்கு ஐயம் பிறந்தால் நான் விலகிக்கொள்வேனே யன்றிக் கணக்குக் கேட்க மாட்டேன்.3

தகுதித்தாள்:

30

"மறைமலையடிகள் விடுத்த முடங்கல்களை யான் போற்ற வில்லை. அவர்கள் தந்த தகுதித்தாள் மூலமும் படிகளும் ஓர் உறைக்குள் இட்டு வைத்திருந்தேன். பல இடங்களிற் பார்த்தும் கிடைக்கவில்லை. ஆனால் எங்கேனும் ஓரிடத்தில் இருக்கத் தான் செய்யும். கிடைத்தவுடன் அனுப்புகிறேன்”31

அச்சம் :

"மறைமலையடிகள் நற்சான்று இன்னும் அகப்படவில்லை. தேடத் தேட அச்சமிகுகின்றது

இடுநூல் இணைப்பு :

66

"32

“என் இடுநூலில் ஒரு பகுதி விளக்கமில்லாததால் அதை யிட்டு ஒருகால் தள்ளினும் தள்ளலாம். அதனால் அதை விளங்கும் பகுதியையே செல்விக் கட்டுரையாக விடுத்திருக்கிறேன். உடனே அச்சிட்டு 6 படிகள் எனக்கு விடுக்க வந்தவுடன் பல்கலைக் கழகத்திற்கு விடுக்கவேண்டும். பிந்தினால் பயன்படாது போவ துடன் பேரிழப்பிற்கிடமாகவுமிருக்கும். இடுநூற்றுக்குச் சான்றாகவுள்ள அச்சுத்தாளோ சுவடியோ புத்தகமோ அனுப்பலாமென விதியுள்ளது. ஆனால் உரிய காலத்தில் அனுப்பிவிடவேண்டும். 33

வெறுப்பு :

"குமரி நாட்டுக் கொள்கையும் தனித்தமிழ்க் கொள்கையும் பற்றி அவர்கள் (திரு. சற்குணர்) என்னை வெறுப்பதால் (இடு நூல்பற்றி) யான் பார்த்துப் பயனில்லை’34

30.25-2-50 (வ.சு.)

32.12-12-50 (வ.சு.)

31. 3-12-50 (வ.சு.)

33.1-3-50 (621.5.)

34.28-3-50 (வ.சு.)