உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

குறையா வளம்:

139

நம்மிடம் நூல்கட்குக் குறைவில்லை. காமத்தையும் காதலையும் பற்றிய வடநூல் தென்னூல் மேனூல் ஆகிய முப் பால் நூல்களையும் படித்து மணவாழ்க்கை என்றொரு புத்தகம் 200 பக்கத்திற்கு மேற்படுவது எழுதி வருகின்றேன். பல்லாயிரக் கணக்காய் விரைந்து செலவாகும் என்பது என் நம்பிக்கை.

மூச்சுவிட முடியாது:

“பல்கலைக்கழக விடைத்தாள் திருத்து வேலை மூண்டு விட்டது. இம்மாத இறுதிவரை மூச்சுவிட முடியாது”.36

தப்பிப் பிழைத்தல் :

66

“தமிழ்த் தொண்டிற்காகத்தான் தாங்கள் தப்பினீர்கள் என்ற உணர்ச்சியுண்டாயிற்று. ஐம்பத்திற்கு மேல் அலைச்சலை யும் அளவிறந்த வேலையையும் வைத்துக் கொள்ளக் கூடாது. யாழ்பாணஞ் சென்றதே தவறு. செட்டியார் தம் விளம்பரத் திற்காகத் தங்களை அழைத்திருக்கலாம். இதற்கு நாடுவிட்டு நாடு செல்லத் தேவையில்லை”37

கலைச் சொற்கள் :

“கலைச் சொற்களையெல்லாம் தனித்தமிழில் ஆக்கிக் கொண்ட பின்னல்லது தமிழை வளர்க்க முடியாது”.38

மெய்ப்புத் திருத்தம்:

66

ஒரு நாளைக்கு 6 படிவம் வீதம் (மெய்ப்புத் ) திருத்த முடியும். சனி ஞாயிறுகளில் எட்டும் இயலும்”.3

சான்றுத் தொகுப்பு :

39

40

திருச்செங்கோடு கண்ணகி விண்ணேறிய இடம் என்று எவரும் பேசின் அவர் காட்டும் சான்றுகளைக் குறித்தெழுதுக. நிலைத்த ஒப்புகை :

ஒரு புதுக் கட்டுரை தங்கள் மலர்க்கு வரையும் ஆற்ற லற்றிருக்கிறேன். பழங்கட்டுரைபற்றி என்னைக் கேட்கவே

35.3-4-50 (வ.சு.)

37.18-6-51 (வ.சு.)

39.25-8-51 (வ.சு.)

36.12-4-50 (வ.சு.)

38.24-7-51 (வ.சு.)

40.27-5-65 (மி.மு.சி.)