உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




140

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள் வேண்டேன். என் நூல்களுள் எதினின்றும் எதையும் என்றும் என்னைக் கேளாமலே பயன்படுத்துக. இது நிலைத்த ஒப்புகை.

பேச்சும் எழுத்தும்:

து

இயன்றவரை தனித்தமிழ் பேசுக: எழுதுக.

ஏசுவின் படம் :

42

41

பாரதி புத்தகசாலை உரிமையாளரைக் காணின் எனக்கு வாங்கிவைப்பதாகச் சொன்ன ஏசுவின் படத்தைப்பற்றி நினை

வூட்டுக.43

உள்ளத் தளிர்ப்பு :

புலவர் திருமலையார் புலவர் தட்சிணா மூர்த்தியார் முதலிய கெழுதகை நண்பரைக் காணின் என் உள்ளம் தளிர்ப் பெய்தும்."

44

உடன்பாட்டு முகம் :

இந்தியெதிர்ப்பென்னும் எதிர்மறை முகத்தால் (நேரல்லாத வழியில்) இயக்கத்தை நடத்துவதிலும், தமிழ்க் காப்பென்னும் உடன் பாட்டு முகத்தால் (நேர் வழியில்) நடத்துவது மிகவும் நல்லாது.45

புதுச் சொல்லாக்கப் புதையல் :

வெளிவர இருக்கும் நூற்பட்டியில் (1) முத்தமிழ் (2) செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் நெறி முறைகள் என்ற இரண்டையும் சேர்த்துக் கொள்க. இரண்டாவது குறித்தது தமிழில் எப்பொருட்கும் புதுச்சொல் புனைதற்கு இன்றியமையாதது.

கடிதச் சுருக்கம் :

பேரன்பரீர்,

46

1-4-64

வணக்கம்.

6

தங்கள் 31-3-64 அஞ்சலட்டை வந்து சேர்ந்தது. 12-4-64 அன்றே நக்கீரர் விழா நடைபெறுக.

41. 26-11-63 (வி.அ.க.) 43.16-1-64 (வி.அ.க.)

45.2-3-64 (வி.அ.க.)

(ஒப்பம்) ஞா. தேவநேயன்47

42.17-11-61(வி.அ.க.)

44.23-1-64 (மி.மு.சி.)

46.11-3-64 (வி.அ.க.) 47. மி.மு.சி.