உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




154

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

தாமரைச்

26. முத்துமாலை

சல்வர் வ.சு. அவர்கள்

பாவாணர்

கடிதங்களாக ஒட்டுக்கோப்பில் தொகுத்துவைத்தவை போக நூற்றிருபது கடிதங்கள் ஒரு கட்டாகக் கிடைத்தன. அவ் வனைத்தும் பாவாணரால் அவர்க்கு எழுதப்பட்டவை. அவர்தம் கடிதங்கள் 1970 ஆம் ஆண்டுக்குரியவையும் அதற்கு மேற்பட்ட

வை

யும் இருத்தல் வேண்டும் என்னும் எண்ணத்தை வெளியிட்டு இந்நாள் ஆட்சியாளர் திரு. இரா. முத்துக்குமாரசாமி அவர்க ளிடம் வேண்டிக்கொண்டேன். தாமரைச் செல்வர் தொகுப்பில் 120 கடிதங்கள் வரை இருக்கக் கண்டு மகிழ்ந்து பயன்படுத்திக் கொள்ள வழங்கினார்கள். இன்னும் இவ்வெண்ணிக்கையுள்ள கடிதத்தொகுதி இருக்கவேண்டும் என்றே நம்புகின்றேன். எனினும் கிடைத்தவற்றைப் பயன்படுத்தும் முகத்தால் கால வரிசைப்படுத்தி முத்து மாலை என்னும் இத்தலைப்பில் தொகுத் துள்ளேன்.

ஆயிரத்துள் ஒன்றாய், பல்லாயிரத்துள் ஒன்றாய் முழுநிறை முத்துக் கிட்டும்; அவ்வாறு பாவாணர் தொகுத்த நூல்களைப் பற்றிய பற்றிய செய்திகள் நிரம்பிய பகுதி இஃதாகலின் இப் பெயர்த்தாயிற்று!

ஒளியும் அளவும் அமைப்பும் பார்த்துப் பொருந்திய வற்றைத் தொகுப்பதே முத்துமாலை ஆகலின் அப்பெயர்க்கும் பொருந்திற்று!

‘முத்து’ தேடித் தந்த கடிதங்களின் பயனீடர்க இப்பகுதி வருதலின் அதனைக் குறித்தும் முத்துமாலையாயிற்று!

வை.

இங்குத் தரப்பெறும் செய்திகள் காலவரிசைப்பட்ட எல்லாமும் தாமரைச் செல்வர்க்கு வந்தவை ஆதலின் கடித உரிமையாளர் பெயர்ச்சுட்டு தவிர்க்கப்பட்டதாம்.

1. 2-1-70