உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




156

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

எழுத்துப்பணி :

ரவில் நான் எழுத முடியாது; பகலிலும் யிட்டிடையிட்டுத்தான் எழுத இயலும்.

இடை

5

குடம்பை:

குடம்பை என்னும் சொற்குக்கீழ், பின்வருவதைச் சேர்த்துக்

கொள்க.

1. குடம்பை - குரம்பை = 1. பறவைக்கூடு

2. சிறுகுடில். "இல்வேய் குரம்பை” (மதுரைக் 310)

3. நெற்கூடு. "நெற்குவை குரம்பையின் நிரப்புவித்தனர்” (கந்த.நாட் - 26)

4. கூடுபோன்ற உடம்பு. “பொருந்திய குரம்பை தன்னைப் பொருளெனக் கருத வேண்டா” (வேதா.448-1)

ம குரம்பு.6

தனிச்சலுகை :

தமிழை வளர்ப்பது கழகத்தின் இரு நோக்களுள் ஒன்று. மறைமலையடிகட்குப்பின் தமிழை வளர்ப்பவன் நான் ஒருவனே. வடமொழியினின்று தமிழை மீட்பதென் வாழ்க்கைக் குறிக் கோள். ஆதலால் மற்றைப் புலவரைப் போலாது என்னைச் சிறப்பாகக் கருதித் தனிச்சலுகை காட்டுவது - கழக கடமையென்று இயக்குநர் குழுவிற்கு எடுத்துச் சொல்லவேண்டும்.

தனித்தன்மை :

7

தமிழை வடமொழியின்று மீட்கவேண்டும் என்னும் குறிக் கோள் கொண்டே நான் கற்றாய்ந்தவன். இதற்கு மிகுந்த நெஞ்சுரமும், தற்சார்பு மனப்பான்மையும் வேண்டும். இவை பிறர்க்கில்லை. 8

இறைவன் துணை :

நான் ஒருவன் இன்றேல் எதிர்காலத்தில் தமிழ் இருக்கு மென்று கருதுகின்றீர்களா? நான் தமிழுக்காகப் பட்டபாட்டை

5. 24-7-70

7. 31-7-70

6. 28-7-70

8. 15-8-70