உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

157

இறைவன்தான் அறிவான். என் பணிக்கு இறைவன் துணை யுண்டென்னும் நம்பிக்கையினாலேயே இன்னும் இதில் ஊன்றி நிற்கின்றேன்.

9

எழுத்துவேலை :

புதுவைச் சிப்மேர் (Jipmer) மருத்துவ விடுதியின்று சென்ற வியாழன் விலக்கைப் பெற்று முந்தாநாள் இங்கு வந்து சேர்ந்தேன். இம்மாத இறுதிவரை நான் எழுத்து வேலை செய்ய இயலாது.

10

மட்டிட்டது:

Ltd., என்பதை லிமிடெட் என்று வரிபெயர்த்து வழங்கற்க. மட்டிட்டது என்று மொழிபெயர்த்து வழங்குக. பிராட்வே என்பதைப் பிராடுவே என்றாவது குறிக்க. தென்சொல் வல்லின மெய்யில் இறாது. பெருவழி என்று குறித்தல் மிக நன்றாம். பிராடுவே என்று பிறைக்கோட்டில் இருக்கலாம். "

அடை :

என் பெயர்க்கு முன் பண்டித அல்லது பண்டித புலவ என்னும் அடை கொடுக்க வேண்டேன். தமிழில் பேரா. என்றும் ஆங்கிலத்தில் Prof என்றும் குறிக்க "அ.

அரிதும் எளிதும் :

பிரித்தானியக்

11A.

கலைக்களஞ்சியத்தை எருதந்துறை ஆங்கிலப் பேரகர முதலியைப்போன்றே உடனே வாங்கிவைக்க. பணம் முழுதும் ஒரு கிழமைக்குள் தங்கள் கைசேரும். இம்மியும் ஐயுற வேண்டேன். அது கிடைப்பதரிதென்று தாங்களே எழுதியிருந்தீர்கள். இன்று எளிதாய்க் கிட்டும்போது கடுத்து வாங்கிவிடுக. அது கைதப்பின் தங்களைத்தான் குறை கூறுவேன். ஆரிய தரங்கிணியும் வாங்கி வைக்க. 12

பல்கலைக் கழக நூல்கள் :

பின்வரும் நூல்களையும் எருதந்துறைப் ப.க.க. அச்சக வாயிலாக வாங்கித் தருக.

9. 20-8-70

11. 16-1-71

12. 6-3-71

10. 7-10-70.

11...16-1-71