உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

சேந்தன் செந்தமிழ் :

159

பாம்பன் சுவாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அவர்கள் எழுதிய ‘சேந்தன் செந்தமிழ்' பார்க்கவில்லை.. 1906இல் நான் நாலாட்டைச் சிறுவனாயிருந்தபோதும், அடிகட்குப் பத்தாண்டு முன்பும் அவர்கள் தனித்தமிழ்க் காப்பு நூல் முதன் முதலாக எழுதினார்களென்பது மிகமிக மெச்சத் தக்கதே. உடனே ஒரு படி வாங்கி அனுப்புக. தமிழர் வரலாற்றில் அவர்களைப் பாராட்டவேண்டும். தமிழ் வரலாறு அச்சிட்ட போது தாங்கள் இச்செய்தியைத் தெரிவிக்கவில்லையே!7

படைப்பு நோக்கு :

தமிழ் திராவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்னும் உண்மையை உலகமறிய மேலையறிஞர் ஒப்ப நாட்டவே இறைவன் என்னைப் படைத்திருக்கிறான். தங்கள் காலத்திலேயே இந்நிலைமையைக் கண்டு களிப்பீர்கள். எனக்குச் சில அகர முதலிகள் மட்டும் வேண்டும்.

சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டு வருவனவற்றுள் கிற்றல் கன்னட அகர முதலி நாற்பாகங்களுள் முன்னிரண்டுதான் வாங்கித் தந்தீர்கள். பின்னிரண்டு வாங்கவில்லை. இதற்குள் வெளிவந்திருக்குமே! உடனே வினவி வாங்குக. முதற்பாகம் 1968-இலும், இரண்டாம் பாகம் 1969-இலும் வெளிவந்தன. தெலுங்ககர முதலியும் வெளியிடுகின்றனர். அதனையும் வினவி வாங்குக. 18

குலைவெடிப்பு :

என் மூத்த அக்கையர் மகனும் என் மனைவியார் தம்பியும் பையர் பருவத்தில் என்னால் வளர்க்கப்பெற்றவனுமாகிய தாவீது (David) சுந்தரராசு நாமக்கல்லில் கூட்டுறவுத் துணைப் பதிவாளனாக இருந்தவன் சென்ற கிழமை 43 ஆம் அகவையில் திடுமெனக் குலைவெடித்து இறந்துபோனான். அதுபற்றிச் சன்றிருந்து இன்றுதான் திரும்பினேன். ஒரு கிழமை ஒரு வேலையும் செய்யவில்லை.19

17. 17-8-71

19. 5-10-71

18. 17-8-71