உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




160

அரும்பெரு நூல் :

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

கிரையர்சன் இந்திய மொழியியற் கணக்கீடு வந்து சேரும் வரை நம்பிக்கையில்லை. ஆராய்ச்சியாளர்க்கும் நூலகங்கட்கும் இன்றியமையாத அரும்பெரு நூல். தீர்ந்துபோயிருக்குமோ வென்று அஞ்சுகிறேன். விலையைப் பற்றிக் கவலையில்லை. 20

இந்திய வரலாறு :

பேரா (k) நீலகண்ட சாத்திரியாரும் இன்னொருவரும் ணைந்து இந்திய வரலாறொன்று ஆங்கிலத்தில் அண்மையில் வெளியிட்டுள்ளனர். அலையன்சு பதிப்பக வெளியீடு. 27 உரூபா. 26-9-71 மெயில்தாளில் விளம்பரம் வந்தது. எடுத்து வைத்தேன். காணவில்லை. அப்பொத்தகத்தையும் உடனே வாங்கி வைக்க.21

அறிவு வேட்கை :

மரபு :

கிரையர்சன் இந்திய மொழியௗவைக் கணக்கீடு 14 மடலம் வந்த வுடன் நீலகண்ட சாத்திரி An advanced History of India-வும் சேர்த்து தி.வி.எசு. வாயிலாக என் மகன் பெயருக்கு வேலூர் முகவரிக்கு விடுக்க.

இயலுமாயின் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திற்குச் செய்தது போல் முழுக் கழிவையும் எனக்குத் தந்துவிடுக.

அளவற்ற அறிவு வேட்கையாலும் தமிழ்ப் பற்றாலும் இவற்றை வாங்குகின்றேன். கையிலுள்ள பணத்தையெல்லாம் தமிழர் வரலாறு அச்சிடக் கொடுத்துவிட்டேன். என் முழுச் சொத்தும் நூலகம்தான்.

22

மரபு என்பது குடியைக் (Tribe) குறிக்கும்போததான் தொகுதிப் பெயராகும். கொடிவழியைக் குறிக்கும் போது தொடர்ச்சிப் பெயரேயன்றித் தொகுதிப் பெயராகாது.

India as Known to panini ஒருபடி பேரா. கோ. இராமச்சந்திரனாரிடம் உளது. முகவரி தெரியாவிடின் அவரைக் கேட்டுத் தெரிந்துகொள்க. ஒருகால் மோத்திலால் பனார்சிதாசு கூட விற்கலாம்.

20. 11.10.71.

21.. 12.10.71

22.25.10.71.