உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




162

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

ஓவியமில்லாமலே அழகிய வண்ணத்தாளில் அல்லது ஓவியத்தாளில் நூற்பெயரும் என்பெயரும் இருந்தாற் போதும். அன்பு கூர்ந்து கவனிக்க. 1. கருப்பு நிறமே இருத்தல் கூடாது. 2. ஓவியம் வேண்டேன். 3. இள நீலம், கெம்பு, பழக்காவி (Orange) முதலிய அழகிய நிறங்களுள் ஒன்றைத் தெரிந்தெடுக்க. விரைந்து விடுக்க.

என் பெயர் தேவநேயன் என்று மட்டும் இருத்தல் வேண்டும்.27

பெரிதும் சிறிதும் :

எவ்விடத்திலும் கறுப்பு நிறம் சிற்றளவிலும் இருக்க வேண்டவே வேண்டேன். நூற்பெயர் பெரிய எழுத்திலும் ஆசிரியன் பெயர் சிறிய எழுத்திலும் இருத்தல் வேண்டும். ஞா' என்னும் முதலெழுத்தும், பாவாணர் என்னும் பட்டமும் இருத்தல் கூடாது.

28

சட்டை முகப்போவியம் :

சட்டை முகப்போவியம் சரிதான். ஆயின் மீண்டும் கறுப்பு வண்ணத்திலேயே தீட்டியிருக்கின்றது. அவ்வண்ணத்தில் ஒரு புள்ளியேனும் இருத்தல் கூடாது. அழகிய நீல வண்ணத்தில் நூற் பெயரும் என்பெயரும் வெண்கோடாயிருக்கட்டும். இரு பெயர்க்கும் இடையில் உலக உருண்டைப் படமிருக்கலாம். 29 அகர முதலி ஏவம் :

பாசுவொர்து தாலர் கிடையாமையாலும் எருதந்துறைப் ப.க.க பதிப்பக வெளியீடு சிறந்ததாகவே இருக்குமாதலாலும் என் மொழியாராய்ச்சிக்கு ஆங்கில சாகசனிய - ஆங்கில அகரமுதலி மிகத் தேவையாதலாலும், பாசுவொர்து - காம்வெல் அகர முதலியின் முப்பாகமுங் கொண்ட ஒரு தொகுதிக்கு ஏவம் (Order) கொடுக்கலாம். அது வெளியாகி வருமுன் (500 உரூபா போல்) தொகுத்து வைத்துக்கொள்ளலாம். ஆனால் அது Anglo- Saxon English அகரமுதலியாயிருக்க வேண்டும். ஆங்கில சாகசனுக்கு ஆங்கில சாகனிலேயே பொருள் கூறுவது வேண்டாம். அது எனக்குப் பயன்படாது.

27.2-3-72

29.9-3-72

28.4-3-72