உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




224

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

அருள்நெறித் திருக்கூட்டத் தலைவர் தேவாரம் ஓதிக் கரணியத்தை நடத்தி வைப்பது. ஆரியர் உட்பட அனைவர்க்கும் ஏற்குமாதலால் நான் வரத் தேவையில்லை. என்பெயரை அழைப்பிதழில் குறிக்கலாம். இறைவனுக்குத் திருவுள்ளமாயின் வருகின்றேன். ஆயின் 10.1.75 பணம் அனுப்ப வேண்டியதில்லை. நான்வரின் நேரில் வாங்கிக்கொள்வேன்.

நான் வர இயலாவிடின் திரு. மூக்கப் பிள்ளையைக் கொண்டே கரணம் நடத்திக் கொள்ள அணியமாயிருக்க.

என் வாழ்த்து நான்வரினும் வராவிடினும் ஒத்த வலிமை யுள்ளதே.

இறைவனருளால் கரணம் இனிது நிகழ்க. எல்லாம் வல்ல அவனை இறைஞ்சுகின்றேன்.

வாழ்த்து

மு.வ.ப. 8.1.75

நான்மூலையும் வண்ண ணைமுளரி (Rose) அச்சிட்ட மஞ்சள் தாளில் எழுதப்பட்ட நும் திருமண வாழ்த்து இன்று பதிவஞ்சலில் விடுக்கப்பட்டுள்ளது.

கரணம்

மு.வ. ப. 24.1.75

தேவாரம் ஓதித் திருமணக்கரணம் நடத்தி வைப்பது அலுவலக மேலதிகாரிகட்கும் ஏற்றதாயிருக்கும்.

"உலகெலா முணர்ந்தோதற் கரியவன்” என்று பெரிய புராணக் கடவுள் வாழ்த்தையாவது, அதையொத்த திருப்பதிகச் செய்யுளையாவது பாடித் தொடங்கச் சொல்லலாம்.

“மாதர் பிறைக் கண்ணியானை” என்னும் திருவையாற்றுப் பதிகத்தையும், “மண்ணி னல்லவண்ணம் வாழலாம்” என்னும் திருக்கழுமலப் பதிகத்தையும் முன்னும் பின்னுமாகப் பாடுவது பொருத்தமாகும். இசையின்றி ஓதுவதைவிட இசையுடன் பாடுவதே நன்று.

இறைவன் திருவருளால் கரணமும் விழாவும் இனிது நடைபெறுக. இல்லறம் இன்பமாக நீடுக.

மு.வ.ப. 24.1.75