உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

225

வேனில் உணவு

உடம்பைப் பேணுவதையே முதற்கடமையாகக் கொள்க. வேனிற் காலத்திற் குளிர்ச்சிக்கேற்ற உணவுகளைவே உண்டு வருக.

முதன்மொழி வெளியீட்டிற்கு மதுரையே ஏற்றது.

அதிகாரப்பயன்

கு.பூ. 5.7.79

தமிழ் வளர்ச்சியும் தமிழன் உயர்வும் ஒன்றையொன்று தழுவியவை.

அதிகாரமின்றி அங்குமிங்கும் ஓடியாடித் திரிநிலை யினும் அதிகாரத்துடன் ஓரிடத்திலிருக்கும் நிலையே தொண்டு செய்யச் சிறந்தது.

1.

2.

3.

4.

5.

6.

7.

கல்லூரி மாணவர் அனைவர்க்கும் தமிழ்ப் பற்றூட்டலாம். தமிழ் என்பது செந்தமிழே.

ஆண்டுதோறும் வெளியேறும் மாணவருள் ஒருவரையேனும் தமிழ்த்தொண்டராக்கலாம்.

அரசோ பல்கலைக் கழகமோ தமிழுக்குக் கேடான சட்டம் பிறப்பின் அல்லது கட்டளையிடின் கண்டித்துத் தவிர்க்கலாம்.

இதற்குப் பிற கல்லூரிவையாபுரிகள் வலிமையைக் குறைக்கலாம். இந்தித் திணிப்பையும் வடமொழி வழிபாட்டையும் தடுக்கலாம்.

உ.த.க. மாநாட்டுக்குத் தலைமை தாங்கலாம். ஒருநல்லியங்கி கிடைக்கும் வரை நான் சென்னையை விட்டு வெளியேற இயலாது. கல்லூரிச் சார்பில் அல்லது தமிழ்ச் சார்பில் உலகஞ்சுற்ற வாய்ப் புண்டு. ஆங்கிலப் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் விரைந்து பெருக்கிக் கொள்க.

-

விற்பனை

த.கு.ம. 11.8.79

ரீரெளியவர்க்கு மட்டும் ஒரு சிறு உதவிபோலப் பத்து

உ ரூபாவிற்குப் பிறர்க்குத் தெரியாதவாறு விற்பதனாற் கேடில்லை