உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




228

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

கொள்ளலாம். அதை இல்லத்தில் விழாவாகக் கொண்டாடு வதுடன் ஊர்வலத்தாலும் ஊரார்க்கறிவிக்கலாம்.

தமிழ்ப்பெயர் தாங்குபவரே உண்மைத் தமிழராவர் தமிழ்ப்பெயர் ஏற்றபின் தமிழிலேயே திருமணத்தையும் இரு வகைச் சடங்குகளையும் செய்தலும் செய்வித்தலும் வேண்டும். கடவுள் நம்பிக்கையுள்ளவர் திருவழிபாட்டையும் தமிழிலேயே ஆற்றுதல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து செய்துவரின் இன்னும் ஐந்தாண்டிற்குள் தமிழர் தம் அடிமைத் தனமும் அறியாமையும் அடியோடு நீங்கி மேலையர்போல் புதுப்புனைவு தலைப்படுவர் என்பது திண்ணம்.

ஆங்கிலர் நீங்கியதால் தமிழ்நாடு விடுதலையடைய வில்லை. ஆரியம் நீங்குவதே விடுதலையாம்.

உண்மையான தமிழர்

மி.மு.சி. 3.2.71

வேறுபாடு இல்லை

சய்ய

சன்னை அகர முதலித் திருத்தம் ப.க.க. வேண்டியவைவேலை. அதை நாம் திருத்த மேற்கொண்டதைப் பாராட்டிப் பொருளுதவியும் செய்யவேண்டும். அதுகூட நாம் கேட்கவில்லை. திருத்தும் தகுதியுள்ளதாக நடிக்கும் குழுவைக் கலைத்துவிட்டு, சென்னையகர முதலி முத்தொகுதியுள் ஒன்றை நமக்கு விலைக்கோ இலவசமாகவோ தரல்வேண்டும். இதற்குத் திரு.நெ.து.சு. அஞ்சினாரெனின் அவர்க்கும் இலக்குமணசாமி முதலியார்க்கும் வேறுபாடே இல்லை.

வெறி

இல.க.இ. 18.8.71

கடவுள் இல்லை என்பதும் ஒரு மதம் என்று 'தமிழர் மதம்’ 5ஆம் இயலிற் காட்டப்பட்டுள்ளது. ஆதலால், கடவுளை நம்புவாரை மதவெறியர் என்று எவரும் குறைகூற இடமில்லை. நம்பா மதத்தாரே இன்று மதவெறியராய்த் தம் மதத்தை எங்கும் பரப்ப முனைகின்றனர்.

கா.இ.மு. 5.8.72

அகக்கரண வளர்ச்சியும் அறிவு விளக்கமும் இல்லாத மருட்பிறவிகள், தம் மனநிலைக்கேற்றவாறு பிதற்றுவதைப் பொருட்படுத்த வேண்டேன். மறைமலையடிகட்கு மாறானவன் உண்மைத் தமிழனல்லன்.

நா.சி. 9.9.72