உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

229

பொதுவுடைமை

எதிர்காலத்தில் தமிழ்நாடும் இந்தியாவும் மட்டுமின்றி உலகமுழுதும் பொதுவுடைமையாட்சியைத் தான் மேற் கொள்ளும். அது வருமுன் நாமே வழிகாட்டித் தமிழை நிலைப்படுத்தி விடவேண்டும். பிந்தினால் ஒன்றும் இயலாது.

கா.இ.மு. 15.10.72

முந்நோய்கள்

அறியாமை தன்னலம் அழுக்காறு ஆகிய முந்நோய்கள் நம் இனத்தைப் பல்வேறு துறையில் தொன்று தொட்டுக் கெடுத்து வருகின்றன.

கா. .இ.மு. 8.2.73

தமிழ் வரலாறு

மு.வ. தமிழ் இலக்கிய வரலாறு தமிழன் பிறந்தகம் குறியாது மொட்டையாய்த் தொடங்கிய முண்டவரலாறு. முதலிருகழகங்களும் அவர் ஒப்பவில்லை. கடைக் கழகமும் 5ஆம் நூற்றாண்டுச் சமண சங்கமே என்கிறார். தொல்காப்பியம் கி.மு. 3ஆம் நூற்றாண்டென்று சான்றிதழ் கூறப்பட்டுள்ளது.

வ.சு. 16.2.73

பாடுபடுதல்

தனித்தமிழும் பொதுவுடைமையென்னும் கூட்டுடை மையும் வருகின்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெறப்பாடுபடுக. இங்குவரின், அதற்கான வழிவகைகளைச் சொல்வேன்.

த.ப.செ. 22.5.73

என் கணக்கில்

'Origin and apread of the Tamil' ஒருபடி உடனே “திரு. M.G இராமச்சந்திரனார், .M.G.R. உருவாக்கம், ஆர்க்காடு முதலியார் வீதி, மாம்பலம், சென்னை - 17” என்ற முகவரிக்கு விடுத்து விடுக. நான் அனுப்பச் சொன்னதாகவும் கடிதவாயிலாய்த் தெரிவிக்க, ஒரு கிழமைக்குள் பணம் வராவிடின் என் கணக்கில் வைத்துக்