உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

249

7. நூலார்வமும் நூலாக்கமும்

தம்நூல்கள்

தாங்கள் குறித்துள்ள ஆறுநூல்களுள் ஒப்பியன் மொழி நூல் தமிழர் திருமணம் ஆகிய இரண்டும் என் சொந்த வளியீடு. இவை இன்று கி டை யா. ஏனை நான்கும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு. அவற்றுள் கட்டுரை வரைவியல் ஒன்றே தங்கள் நண்பர்க்குப் பயன்படும். இயற்றமிழ் லக்கணம் பல்லாண்டிற்கு முன் 6-ஆம் படிவம் பாடப் பொத்தகமாயிருந்தது. சுட்டுவிளக்கம், முதற்றாய் மொழியுள் அடக்கம். செந்தமிழ்க் காஞ்சி இந்திபெயதிர்ப்புப் பாடல்

தமிழ் வரலாறும், தமிழ் நாகரிகமும் இந்தியெதிர்ப்புப் பற்றியன. இன்று தேவாரம் தியாகராசர் கீர்த்தனை திரைப்படப் பாடல் முதலிய இனிய மெட்டுக்களில் 210 பாட்டுக்கள் கட்டி வைத்திருக்கின்றேன். இப்பாடற்றிரட்டே இசைத்தமிழ்க்

கலம்பகம்.

பெரு. 3.4.64

முரணுரை

“அறத்தாறிதுவென... ஊர்ந்தானிடை” என்னுங் குறட்டுப் பழையதும் புதியதுமாக இருமுரண்பட்ட உரையுண்டு.

பழையவுரை :

அறத்தின்பால் இதுவென்று உரையளவையால், அதாவது நூல்வாயிலாய், சொல்லவேண்டுவதில்லை. பல்லக்குச்சுமப் பானும் ஏறிச்செல்வானும் ஆகிய இருவரின் காட்சியளவையே காட்டும். முற்பிறப்பில் அறஞ்செய்தவன் செல்வதும் செய்யா தவன் வறியனும் ஆவர்.