உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




250

புத்துரை :

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

பல்லக்குச் சுமப்பானையும் ஏறிச் செல்வானையும் காட்டி இதுவே அறவழியென்று சொல்லவேண்டாம். அரசாள்வாரின் தவற்றினாலும் முதலாளியின் கொடுமையினலும் இத்தகைய நிலைமை நேரும்.

66

இப்புத்துரையே பேரா.இலக்குவாணர் போன்றாரின் கருத்து. ஆயின் ஊழ் என்னும் அதிகாரத்தையும் அறனவலி யுறுத்தல் 6ஆம் குறளையும் லர்பல ராகிய காரணம் நோற்பார். சிலர்பலர் நேலாதவர்” என்னுங் குறளையும் வேறு சிலவற்றையும் நடுநிலையாய் நோக்கி ஆசிரியர் கருத்தை உணரின், முன்னதே அவர் கருதியது எனக்கொள்ளக் கிடக் கின்றது. பழைய வுரைகளெல்லாம் இதுவே.

உரையில் ஆழ்தல்

பெரு. 13.6.64

சென்ற வெள்ளிக்கிழமை மாலை சென்னைக் கிண்டிப் பொறியியல் கல்லூரியிற் சொற்பொழிவாற்றச் சென்று மீண்டேன்.

தி.த.ம. உரையெச்சம் எழுதுவதில் ஆழ்ந்து ஈட்டுள்ளேன். 19 மீனம் 2000 மா.இரா.

சிறந்த படைக்கலம்

திருக்குறள் தமிழ் மரபுரை நல்லமுறையில் எழுதப்பட்டு வருகின்றது. பாதி முடிந்துவிட்டது. இது வெளிவந்தபின் தனித்தமிழர்க்கு ஒரு சிறந்த படைக்கலமாகும்.

வ.சு. உதவி

து

28 கும்பம் 2000 மா.இரா.

திரு. வ. சுப்பையாப்பிள்ளை இன்று வெளியீட்டு முயற்சி யிலும் மெய்ப்புத் திருத்த வேலையிலும் உதவ முன் வந்திருக்கின்றார். என் திருக்குறள் தமிழ் மரபுரை மொத்தம் 50 படிவங்கொண்டது. இறுதிப் பத்துப்படிவங்களையும் திருத்த அவரே முழுப்பொறுப்பும் ஏற்றுக்கொண்டார். அவருதவியின் றேல் இன்னும் ஒரு கிழமைக்குள் உரை வெளிவர முடியாது. 10