உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

251

படிவம்ட மேற்பட்டுவிட்டமையால் விலையும் 15 உரூபா வாக்கப்பட்டிருக்கிறது. மாநாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும். 28 நளி 2000 கா.இ.மு.

நூல் வாங்கும் திட்டம்

The Oxford English Dictionary என்னும் ஆங்கிலப் பேரக முதலி வாங்க விருக்கின்றேன். விலை 500 உரூபா. கழிவு தள்ளி 400 உரூபாவிற்கு வாங்க முடியும். 14 மடலம் கொண்டது. இன்னும் ஒரு மாதத்திற்குள் வாங்கிவிடுவேன்.

அடுத்த ஆண்டு ஆங்கிலக் கலைக்களஞ்சியமும் (Encyclopaedia Britanica) வாங்கிவிடுவேன்.

கொண்டு வருக

28 நளி 2000 கா.இ.மு.

வடமொழி வரலாறு குறிப்புப் படியை என்னைக்கேளாது கொண்டு வந்துவிட்டீர். அதனால் முன்பு குறிந்தவற்றைப் பார்க்கவும் புதிதாய்க் குறிப்புகளைச் சேர்க்கவும் முடியவில்லை. அதை அன்றிரவு பார்க்கக் கொடுத்தேனேயன்றி உமக்குச் சொந்தமாகத் தரவில்லை. ஆதலால் உடனே அதைக் கொண்டு

வருக.

LOIT.TIT. 19.9.70

கொங்குதேசராசாக்கள்

கொங்கு தேச ராஜாக்கள்’ என்னும் பொத்தகம் விலைக்குக் கிடையவிடின் இரவலாக வேனும் ஒருபடி வாங்கி த் திரு. நித்தலின்பனார்க்கு அனுப்பிவைக்க. இம்மாதமும் அடுத்த மாதமும் செந்தமிழ்ச் செல்வியில் வெளிவரும் என கட்டுரை களைப் பார்க்க.

மக்கள் பெயர் அகரவரிகை

கா.இ.மு.9.5.70

மக்கள் பெயர் அகரவரிசை, முதல் இந்தி எதிர்ப்புக் காலத்தில் தொகுக்கப்பட்டது. அதன்படியொன்று அனுப்பி வைக்க. ஒழிவு நேரத்திலும் வழிப்போக்கு வேளையிலும் திருத்தியும் விரிவாக்கியும் திரும்புகின்றேன்.

18 சுறவம் 2001 கா.இ.மு.