உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




252

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

தங்கல்

திருக்குறள் தமிழ் மரபுரை இங்கு அசசாவதால் உடனுடன் மெய்ப்புத் திருத்தி விடுக்க இன்னொரு தமிழன்பர் இல்லடத்தில் தங்கிறிருக்கின்றேன்.

திரு.. இரா. முத்துக்கிருட்டிணனார், 67, நாட்டு வைப்பகம் (State Bank) குடியிருப்பு, மேலைத்தாம்பரம், சென்னை - 45)

மொழியாராய்ச்சி

இல.க.இர. 10.9.69

மொழி முந்தியதும் தெளிவானதும் ஆதலால் மொழிநூன் முறைப்பட்ட சொல்லாராய்ச்சி முடிவுகளை எவரும் மறுக்க முடியாது. மொழியராய்ச்சி, கருத்தெழுத்து விளக்கம் முறைப் பட்ட மொழியாராய்ச்சி முடிவை மாற்றமுடியாது. அதனால் தான் இத்துறையில் இறங்கினேன். A guide to western Tamilslogists என்ற பொத்தகம் நடுநிலையாளர் கண்ணையெல்லாம் திறக்கும். இல.க.இர. 5.6.70

மரபுரை

கண்ணொளி தவிர மற்ற வகையில் முழுதும்

திருக்குறள் தமிழ் மரபுரை இன்னும் 400 குறள்கட்கு எழுதியாகவேண்டும். இம்மாதத்திற்குள் பெரும்பாலும் முடிந்து விடும். அதன்பின்தான் வலக்கண் அறுவை.

எருதந்துறை அகரமுதலி

2 விடை 2000 நா.செ.

திரு. வ.சுப்பையாப்பிள்ளை வாயிலாக எருதந்துறைப் ப.க.க. அச்சகத்தார்க்குக் (Oxford University Press) கொடுத்திருந்த ஏவப்படி எருதந்துறை ஆங்கிலப் பேரகரமுதலி (13 மடலம்) வந்து விட்டதாம். கழிவுதள்ளி விலை 1240 உரூபா. இரு கிழமைக்குள் வாங்காவிடின் வேறொருவர்க்குப் போய்விடுமாம். ஆகையால், அத்தொகையை உடனே காசோலையாகத் தாமரைத் திரு. வ. சுப்பையாப் பிள்ளை, 6, பவழக்காரத் தெரு, மண்ணடி, சென்னை - 1 என்ற முகவரிக்குப் பதிவஞ்சலில் விடுத்துவிட்டு எனக்கும் தெரிவித்துவிடுக.

12 அலவன் 2001 நா.செ.