உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

253

தமிழர் மதம்

என் செல்வநிலை திருந்தும் வரை என் நூல்களை யெல்லாம் நானே வெளியிடுதல் நன்று.

'தமிழர் மதம்' என்னும் நூலை அடிகள் வெளியிட முன்வந்தது மகிழ்ச்சிக்குரிய செய்திதான். ஆயின் அதில் பல இடர்பாடுண்டு. நான், சிறுதெய்வ வணக்கம். ருபெருமதம், கடவுள் நெறி ஆகிய முத்திறக் கொள்கைகளையும் நடு நிலையாய் உள்ளதை உள்ளவாறே விளக்குவேன். திருமாலியத் திற்கில்லாத சில சிறப்புக்கள் சிவனியத்திற்குண்டு. ஆயினும், சிவநெறியையே மேற்கொண்ட அடிகள் மடவளாகம். திருமால் நெறியையும் விளக்கும் நூலை வெளியிடுவது சிவநெறிச் செல்வரின் கண்டனத்திற்கிடமாகும். மேலும், உருவ வணக்க மில்லாத கடவுள் நெறியே தலைசிறந்ததென்று கூறுவதும், இற்றைச் சிவநெறிக்கேற்காது. அதனால் நடுநிலையும் கடவுள் நம்பிக்கையும் உள்ள தமிழன்பர் உதவிகொண்டே அந்நூலை வெளியிட முடியும். அடிகள் ஏற்கெனவே என் மதுரை மணி விழக்குழுவிற்கு ஆயிரம் உரூபா அளித்துவிட்டனர். இனி னி அவர்களை அடுத்தல் கூடாது. சேயோன் (முருகன்) வணக்கம் ஆரியர் வருமுன்னே குமரிநாட்டில் தோன்றிவிட்டது. பனி மலையடுத்த கங்கையாற்று நாணற் (சரவணப்) பொய்கையில் முருகன் தோன்றினான் என்னும் ஆரியக்கட்டுக்கதையான கந்த புராணத்தை மறுப்பதும் இற்றைச் சிவநெறியாளர்க்கு வெறுப்பாகும். இத்தகைய இடர்ப்பாடான நிலைகள் பலவுள. 'சிவாயநம' என்னும் திருவைந்தெழுத்தே ஆரியம். 'சிவபோற்றி’ என்பதே உண்மையான தமிழர் திருவைந்தெழுத்து. ஆகையால் இற்றை நிலையில் தமிழர் மதத்தை வெளியிடமுடியாது. தமிழர் வரலாறு, தொல்காப்பிய விளக்கம், திருக்குறள் தமிழ்மரபுரை, வடமொழி வரலாறு ஆகிய நூல்கள் எல்லாம் வெளிவந்த பின்தான் மதநூலை வெளியிடமுடியும்.

14 நளி 1997 நா.செ.

மீ

தம் நூல்கள்

தமிழர் வரலாறு இம்மாத இறுதிக்குள் எழுதிமுடியும். அடுத்த மீ அச்சுத் தொடங்கலாம். திசம்பர் இறுதி உ.த.க. மாநாட்டிற்குள் அச்சிட்டுத் தர இயலுமா? கோப்பாளரும்,