உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




254

-

பாவாணர் கடிதங்கள் பாடல்கள் கட்டடகரும் தேர்ச்சி பெற்றவரா? நல்ல வெண்டாள் அங்குக் கிடைக்குமா?

தமிழர் மதம் மீ எழுதிய முடியும். பொங்கற் சமையம் அச்சு வேலையை முடித்து விற்பனைக்குத் தர இயலுமெனின் அதன் அச்சீட்டையும் மேற்கொள்ளலாம். அதுவும் 20 படிவமே.

மன்றம் அடிகளின் பெயர் தாங்குவதால் பிழையொன்று மில்லாதிருத்தல் வேண்டும். அச்சுவேலைதான் முற்றும் குறித்த காலத்திற்குள் முடிதல் வேண்டும். கட்டடம் நூறு நூறாகச் செய்து கொள்ளலாம். இவற்றிற்கிசையின் அடுத்த மீ எனக்குத் தெரிந்தவர் ஒருவர் வருக.

உடனே வாங்குக

கா.இ.மு.9.9.71

ஒற்றுமை அலுவலகத்தில் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகர முதலி (Lexicon) ஒரு தொகுதி 100 உருபாவிற்குக் கிடைக்குமாம். உடனே ஆளனுப்பி வாங்கி விடுக.

தமிழர் வரலாறு

25, 11. 71; 29.11.71 வ.சு.

ஆய்வாளர்க்கும் புலவர்க்கும் தமிழ்ப்பற்றாளர்க்கும் தெரியவேண்டிய பல செய்திகள் தெளிநிலைக் காண்டத்தில் விரும். இந்நூல் விரைந்து விலையாகும். இன்றே ன்றே இரண் டாருவர் கேட்கின்றனர்.

தமிழர் மதம் ஆரியக்கூறுகள் எல்லாம் நீங்கிவரும். எ-டு. 'சிவாய நம' தமிழன்று. 'சிவபோற்றி' என்பதே திருவைந் தெழுத்து. எழுத்தின் தொகை 30. திருமந்திரத்தில் (2698) சொல்லப்பட்ட 50 அன்று. மெய்ப்பொருள் 26;36 அல்ல.

கா.இ.மு. 6.1.72

தமிழ் வழிபாடு

தமிழ் - ஆரியப் போரட்டத்தின் ஒரு கூறான கோவில் தமிழ்வழிபாட்டுக் கிளர்ச்சி பற்றிய வழக்கைத் தீர்க்க, மீயுயர் மன்றத்திற்கு அதிகாரமில்லை. ஆயினும் அஃது இருப்பதுபோல் தோன்றுவது, தமிழர் மத வரலாறு பற்றிய நூலின்மையாலேயே, ஆதலால், தமிழர் மதம் விரைந்து வெளிவரல் வேண்டும்.

கா.இ.மு. 29.5.72