உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

255

தமிழ்நாட்டு விடுதலை

பெரியாரும் தமிழ்நாட்டு விடுதலைக் கொள்கையைப் பரப்பி வருவதாகத் தெரிகின்றது. நாளடைவிற் கிளர்ச்சி வலுக்கத்தான் செய்யும். ஆயின் கொல்குறும்பும் உட்பகையும் மிக்கியிருப்பதால் கீழ்வங்கம்போல் எளிதாய்விடுதலை பெற்று விட முடியாது ஆகவே போரட்ட மறவர்க்குத் துணையாய்ப் பல்வகை வரலாற்று நூலும் அணியமாயிருத்தல் வேண்டும். கா.இ.மு. 29.5.72

முந்நூல் வெளியீடு

தமிழிலக்கிய வரலாறு, தொல்காப்பிய விளக்கம் A Guide ஆகிய மூன்றும் வெளிவந்த பின்னரே என் வெளிப்படைப் போராட்டம் தொடங்கும்.

நூல் வாங்குக.

கா.இ.மு. 5.8.72

தாங்கள் குறித்துள்ள Rardon House Dictionary என்னும் அமெரிக்கப் பதிப்பு ஆங்கில அகரமுதலியை உடனே வாங்கி விடுக.

நூல் வாங்குக.

வ.சு. 6.10.72

மன்பதை வரலாறு (History of Mankind) 3அம் 5 ஆம் மடலங்கள் வந்துவிட்டனவா? வினவி வாங்குக. வ.சு. 3.12.72

நூல்கள் உடனே வேண்டும்

கீழைத் திருப்பொத்தகத் தொடர் ஏன் இன்றுங் கிடைக்கவில்லை. 1967 இல் வெளிவந்த The Nigantu and the Nirukta என்ற பொத்தகத்திலேயே ஐம்பான் பொத்தகங்களையும் பற்றி விளம்பரஞ் செய்திருக்கின்றரே. என்ன மறுமொழி வந்தது. அப்பொத்தகங்கள் வாராமையால் என் வேலை மிகத் தடைப் படுகின்றது. மீண்டும் நினைவூட்டுவிக்க. நீண்ட காலஞ்செல்லு மாயின் இன்று அணியமாய் இருப்பவற்றை உடனேயும்