உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




256

பாவாணர் கடிதங்கள்

-

பாடல்கள்

பிறவற்றைப் பிந்தியும் விடுக்கச் சொல்க. நீண்ட காலமென்றது மும்மாதத்திற்கு மேற்பட்டதை.

நூல்கள் வேண்டும்

வ.சு. 7.11.73

காக்கை பாடினியம் இன்றும் வெளிரவில்லையா? The Gazetteer of India 2 ஆம் மடலம் உடனே வாங்கி வைக்க. என்னைக் கேளாதே வாங்கியிருக்கலாம்.

மறுபதிப்புக்குத் திருத்தம்

வ.சு. 11.4.74.

திருக்குறள் தமிழ் மரபுரை ஓரிரு படிகள் எஞ்சியிருப்பின் விற்காது நிறுத்தி வைக்க. என்னிடமிருந்தவையெல்லாம் தீர்ந்து விட்டன. மறுபதிப்பிற்குத் திருத்தஞ் செய்யக்கூட ஒருபடியு மில்லை.

கா.இ.மு. 4.1.75.

ஊக்கவேலையும் பணந்தண்டலும்

மாநாட்டிற்கு ஊக்கமாக வேலைசெய்யக்கூடியவரும் பணந்தண்டும் ஆற்றருள்ளவருமான செயலாளர் இங்கொரு வருமில்லை. பேரா நிலவழகனார் தான் இயன்றவரை தண்டி வருகின்றார்.

கா.இ.மு. 41. 76. .மு.4.1.76.

செலவுக்குறைவும் சிறப்புக்குறைவும்

நும் இந்திய வைப்பகக்காசோலை (மூவாயிரம் உருபா) மேழம் 2 அன்றே கிடைத்தது. நன்றி.

மண்ணில்விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை நல்ல முறையில் விரைந்துவெளி வரும். காட்டுப்ாபாடியினின்றும் என்மகன் மணிவந்தான். இன்று தாள்விலை மிக ஏறியிருப்பதால் மேலும் ஓராயிரம் வேண்டியிருக்குமென்றான். செலவைக் குறைக்குமாறு சிறப்பைக் குறைப்பது நன்றன்று. பொத்தகம் நன்றாய் விலையாகுமென்று எதிர்பார்க்கின்றேன். அச்சும் கட்டடமும் ஆனவுடன் 500 படிகள் நெய்வேலிக்கு அனுப்பப் பெறும்.

ஆ.க. 17.4.76.