உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

257

சிக்கனம்

மண்ணில் விண்ணிற்குத் துணிக்கட்டடம் உட்பட ஆறாயிரம் உருபா ஆகிவிட்டது. தமிழிலக்கிய வரலாற்றிற்குச் சிங்கைத் தமிழன்பர் திரு.வெ.கோ. கிருட்டிணனார் அளித்த ஐயாயிரத்தில் மூவாயிரம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் படிகள் படியொன்று 12 உருபா. மாநாடு அண்மையில் (ஜுலை 2 ஞாயிறு) இருப்பதால் தேவையான படியினை மாநாட்டுக் கட்டடத்தில் (பெரியார் திடலில்) வாங்கிக் கொள்ளலாம். ஆதலால் தொடர்வண்டிச் சிப்ப விடுக்கைச் செலவு வீணென்று கருதி விடுக்கவில்லை.

அ.வா.வெ.செ. 22.6.78

காப்புநூல்

தமிழிலக்கிய வரலாறு ஒரு சிறந்த காப்புநூல். அச்சில் இருக்கின்றது. அடுத்த மாதம் வெளிவரும்.

வள்ளுவர் கூட்டுடமையினும் விரிவானது. ஆயின் அதே விலை தான் (12 உருபா). உங்கள் பெயருக்கு நூறுபடிகள் விடுக்கப்படும். இயன்ற விரைவில் விற்றுத் தருக. குறைந்த சம்பளக்காரராயின் 10 உருபாவிற்குக் கொடுக்கலாம்.

அதன்பின் The lemurian language and its ramification என்ற நூல் ஈராண்டிற்குள் வெளிவரும். அகர முதலில் முன் அதுவே இறுதிப் போராட்ட நூல். 1982 இல் தமிழ் வட மொழிப் பிணிப்பிலிருந்து விடுதலைபெறுவது திண்ணம்.

அடுத்த செல்வியில் தமிழின் தலைமையை நாட்டும் தனிச்சொற்கள் கட்டுரை தொடக்கம். புலவர்க்கும் உறுப்பி னர்க்கும் அழைப்பிதழ் கல்லச்சு (சுழல்முள்ளச்சு) இ போதும்.

டது

கு.பூ. 20.4.79

விற்பனை

தமிழிலக்கிய வரலாறு இம்மாத இறுதியில் வெளிவரும். உண்மையும் பற்று முள்ள தொண்டரைத் தமிழர் இல்லந் தோறும் போக்கியேனும் விரைந்து விற்பனை செய்தல் வேண்டும். அதன்விலைப் பணமே ஆங்கில நூலுக்கு முதலீடாகும்.