உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




258

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

த.இ. வரலாறு ஏறத்தாழ 400 பக்கம் வரலாம். விலை 12 உருபா என்றே குறிக்கப்பட்டுள்ளது.

அகரமுதலி முடிய இன்னும் பத்தாண்டு செல்லும்.

1982 இல் தமிழாரியப் போராட்டம் வெற்றியாய் முடிதல் வேண்டும்.

கு.பூ. 5.57.79.

தமிழிலக்கிய வரலாறு

தமிழாரியப் போராட்ட இறுதித் தமிழ்ப்படைக் கலமாகிய தமிழிலக்கிய வரலாறு இம்மாத இறுதிக்குள் வெளிவந்துவிடும். இப்பொத்தகவிற்பனைப் பணத்தைக் கொண்டுதான் உலக முழுதும் பரவும் இறுதி ஆங்கிலப் படைக்கலமாகிய நூலை வெளியிடவேண்டும்.

அ.வா.வெ.செ. 25.7.79.

மராட்டி அகரமுதலி

இம்மாத இறுதியில் திரு. செயவேலைக்கண்டு மராட்டி ஆங்கில அகரமுதலியை 400 உருபாவிற்குத் தரமுடியுமா என்று கேட்க. இசையின் இம்மாதச் சம்பளத்தில் வாங்கிவிடலாம்.

னிமேல் அலுவலகத்தில் தட்டச்சாகும் எல்லா ஆங்கிலக்

கடிதங்ளையும் பார்த்துப் பிழை திருத்துக.

நூல்வேண்டும்

இரா. ம.

சப்தமணி தர்ப்பணம்.

ப.க.க.வில் கிடைப்பின் வாங்கிவிடுக.

121/2 உருபாதானே. உடனே கொடுத்தனுப்புகின்றேன்.

லீலா திலகம் மூலமும் வேண்டும்.

திரு.வ.சு.விற்குத் தெரிவிக்க.

சடுத்தம் (Urgent)

உடனே தேவை

இரா.ம.