உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

259

கன்னிமாரா நூல்நிலையத்திலிருந்து முந்தியெடுத்த நூல் உடனடியாகத் தேவை. என் பெயரில் எடுக்க முடியாவிடின் உங்கள் பெயரில் எடுத்து விடுக்க.

ம்மாதச் செல்விக்கட்டுரைக்கு அதில் ஒரு குறிப்பைப் பார்க்க வேண்டும். வருகின்ற திங்கட்கிழமை திருப்பிவிடலாம். இரா.ம. 25.4.80

வெளிவரும் நூல்கள்

அடுத்த ஆண்டு The Lemurian Lsnguage and it ramification Eraucation of the Hindi Imperiaism என்னும் ஈராங்கிலப் பொத்தகங்கள் வெளிவரும். முன்னது உலகமுழுதும் பரவும்.

1981இல் தமிழ் திராவிடத்திற்குத்தாயும் ஆரியத்திற்கு மூலமுமான உலகமுதல் உயர்தனிச் செம்மொழி என்பது நாட்டப்பட்டுவிடும்.

நெருக்கடி நிலை

கு.பூ. 2.8.79

சிங்கைச் செந்தமிழ்ப் புரவலர் திரு.வெ. கோபால கிருட்டிணனார் தமிழிலக்கியவரலாறு வெளியீட்டிற்கு ஐயாயிரம் உருபா.1974 இல் வழங்கினார். அச்சுவேலை தொடங்கி 65 பக்கம் நடந்தபின் இந்திரகாந்தியாரின் நெருக்கடி நிலைமை தடுத்துவிட்டது. மூவாண்டு கழித்து மீண்டும் தொடங்கியபோது முன் வாங்கினதான் மங்கிப் போனதினாலும் தாள்விலை யேற்றத்தினாலும் மூவாயிரம் உருபா கைவிட்டுச் செலவழிக்க நேர்ந்து விட்டது.

அ.வா.வெ.செ. 13.8.79.

பின்னே

ஆங்கில நூல்வெளிவந்த பின்னரே, என்பேச்சை நாடாப் பதி வானிலும் இசைத்தட்டிலும் பதிவுசெய்து கொள்ளலாம்.

கு.பூ. 9.10.79