உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

261

8. அச்சீடும் மெய்ப்பும் பார்த்தலும்

பாரி அச்சகத்தார் (திரு. நாராயணன் செட்டியார்) நல்ல தமிழன்பராயிருப்பதனாலும் பிழையில்லாமல் அச்சிட்டு வருவதனாலும் வடமொழி வரலாறும் அவர் அச்சகத்திலேயே அச்சிடப்பெறும்.

24 சிலை 1997. நா.செ.

மெய்ப்பு அனுப்புதல்

ஒவ்வொரு படிவத்திலும் இறுதிமெய்ப்பு (முடிவு மெய்ப்பு) நான் பார்த்து வருகின்றேன். நேற்று 8 ஆம் 9 ஆம் படிவங்கள் வந்திருக்கவேண்டும். ஆயின் 9 ஆம் படிவம் தான்வந்தது. ஆதலால், அதைத்திருத்த முடியவில்லை. உ னே

8 ஆம் படிவத்தை அனுப்புமாறு எழுதியிருக்கின்றேன். வேலையை ஒழுங்காய்ச் செய்யாததோடு இங்ஙனமுந்தவறு செய்து காலத்தைக் கடத்துகின்றனர். உடனே பாரி அச்சகம் சென்று 8 ஆம் படிவம் அனுப்பப்பட்டுவிட்டதா என்று வினவி அனுப்பப்படாவிடின் அனுப்பச்சொல்க.

வினவியறிந்த எழுதுக

28 கும்பம் 2000 மா.இரா.

பாரி அச்சகம் ஒருமாதமாக ஒருவேலையும் செய்யவில்லை. உ.த.க. விரிவு வேலையும், என் தமிழ் வளர்ச்சித் திட்டமும் குடும்ப வாழ்வுநிலையும் இவ்வாண்டு இதனாற் கெடும்போல் தோன்றுகின்றது. உடனே சென்று என்ன செய்தியென்று வினவியறிந் தெழுதுக.

முதற்படிவத்தை

20 GLDLOLD 2000 LDT.TIT.

மெய்ப்புத்திருத்தல்

மட்டும் அடிக்குமுன்

அனுப்புக.

திருத்திக் குற்றங்களை எடுத்துக் காட்டுவேன். அம்முறைகளையே

பின்னவற்றிலும் பின்பற்றலாம்.