உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




262

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

தாள் வீணாகாவாறு மெய்ப்புக்களையும் முதன் மூவடிப்புக்களையும் மலிவான மென்றாளிலேயே எடுக்க.

அச்சடுக்குதல்

கா.இ.மு. 29.10. 71

ஒரேசமயத்தில் முப்படிவம் அச்சிலிருத்தல் வேண்டும். ஒன்று அடுக்கப்படவும், ஒன்று திருத்தப்படவும், ஒன்று அடிக்கப்படவும் வேண்டும். என் நூலை அடுக்குபவர்க்குப் புலமையில்லாவிடினும் இலக்கணவறிவு சிறிதேனும் வேண்டும்.

அச்சுப்பணி

ப.கு.மு. 3.11.71.

என் நூலை நூலை அடுக்குபவர்க்குச் சிறிது தமிழறிவும் வேண்டும், தமிழஞர் ஒருவர் முழுநேரமுமிருந்து கவனித்தல் வேண்டும்.

அடுக்காளர் ஐவர் இருந்தால்தான் வேலை நடக்கும் .ஒருவன் துண்டறிவிப்பு; ஒருவன் சிறுசுவடி; மூவர் பெருநூல். ஒருபடிவம் அடுக்கவும் ஒருபடிவம் திருத்தவும் ஒருபடிவம் அடிக்கவும் படவேண்டும்.

நூற்கட்டடவினை

கா.இ.மு. 4.11.71

கட்ட வினையிற் குத்தித்தைக்காது கோத்துத் தைக்கச்

சொல்க.

சேர்த்தலும் செருகலும்

கா.இ.மு. 29.5.72

சென்ற காரிவிடுத்த மூலப்பகுதியில், பாலைத்தெய்வம் என்னும் பகுதியிறுதியில் "காளிகோயிற் பூசகன் உவச்சன் எனப்பட்டான்” என்பதைச் சேர்த்துக் கொள்க.

சிவமதம் என்னும் தலைப்பின்கீழ் ‘இருக்கை’ என்னும் சிறு தலைப்புச்செய்தியில் 'வெள்ளிமலையும்' என்பதற்குமுன்’ மலைகளுட் சிறந்த பனிமலைக் கொடுமுடியாகிய' என்னுந் தொடரைச் செருகிக் கொள்க.

ஆடல் 5.7.72