உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

271

சொற்றொகுப்பாளர்

தக்கார் வேறொருவரும் வராமையால், தமிழ்ச்சொற் றொகுப்பாளர் இடம் இன்றும் வெறுமையாயுள்ளது.

நுங்கட்கு விருப்பமாயின் நுங்கள் பயரையும் திறமையையும் பதவியையும் குறித்து, கல்லூரித் துணைப் பேராசிரியர் சம்பளப் புதுத்திட்டத்தை நுங்கட்களிக்குமாறு தலைமை யமைச்சரை வேண்டலாம்.

வேண்டுகோள் ஏவம்

இரா.இ. 9.8.78

துணைப்பேராசிரியர் சம்பளத்திட்டத்தில் 1300 உருபாத் தொடக்கச் சம்பளத்தில் என்னை அமர்த்தினால் உடனே பணியிற்சேர்ந்து கொள்ள அணியமாயிருக்கிறேன் என்று ஒரு வேண்டுகோள் என்பெயருக்கு உடனே விடுக்க. அதன்மேல் வன்மையாய்ப் பரிந்துரைந்து அமர்த்தம் ஆக ஏற்பாடு செய்வேன். பதவி நீண்ட நாளாக வெறுமையாயிருக்கின்றது. இரா.இ. 26.2.79.

அஞ்சவேண்டாநிலை

பை

டயூறு

எவ்வகையிலும் அகரமுதலிப்பணிக்கு நேராவாறு மிக விழிப்பாயும் முன்னெச்சரிக்கையும் இருந்து வருகின்றேன். ஆயினும், இற்றையாட்சியில் ஆரியம் சற்றுத் தலையெடுத்திருப்பதால், எந்நிலைமைக்கும் அணியமாயிருக்கும் வகையிலேயே வீடு கட்டத்தொடங்கியிருக்கின்றேன். வீடு கட்டி முடிந்து தென்குமரியச்சகம் இங்குக் கொண்டுவரப்படின் எந்நிலைமைக்கும் அஞ்சவேண்டியதில்லை.

அ.வா.வெ .செ. 12.11.78

இல்லவே இல்லை

பதிப்பான்மை எழுத்துறவாளர் (Editor and Correspondent) பதவிக்கு அசரியாகவும், தமிழ்ச்சொற்றொகுப்பாளர் பதவிக்குப் புலவர் இளங்குமரனாருமே தலைசிறந்த தகுதியுடையார். எத்துணை வன்மையாகப் பரிந்துரைத்தும் அரசு பொருட் படுத்தியிலது. இவ்விருவரும் இன்றியமையாத உயிர்நாடிப் பணியாளர். முன்னவரை ஓய்வு பெற்றவரென்றும், பின்னவரைத் தனியார் பள்ளியலுவலரென்றும் அரசு புறக்கணிக்கின்றது.