உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




272

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

ஆயின் இவருக்கிணையானவர் இளைஞருள்ளும், அரசினர் பள்ளிகளிலும் இல்லவேயில்லை.

அ.வா.வெ.செ. 1.12.79.

விடாப்போர்

எம் அலுவலகத்திற்கு 9 புதுப்பதவிகளல்ல, ஏழே தோற்று க்கப்பட்டுள. ஆயினும் 51/2 ஆண்டாக ஒன்றும் தோன்று விக்கப்படாதிருந்த நிலையில் இவ்வேழை ஒருங்கே தோற்று வித்ததை மிகப் பாராட்டத்தான் வேண்டும்.

இதற்குத் இன்றியமை

முதன்மடலம் முதற்பகுதி மாநாட்டிற்குள் வெளிவருமாறு அச்சிற்குக் காடுக்கப்படும் நிலையிலுள்ளது. திரு அசரியாவும் புலவர் இளங்குமரனும் யாதவர். இன்று அமர்த்தப்படும் எழுவரும் இவ்விருவர்க்கு ஈடானவரல்லர். திரு. அசரியாவை ஓய்வுபெற்றவரென்றும், பு.இ.குமரனாரைத் துணைப்பேராசிரியர் சம்பளத் திட்டத் திற்குத் தகாதவரென்றும் அரசு தள்ளிவருகின்றது. ஆயினும் விடாது போராடி வருகின்றது.

அ.வ.வெ.செ. 3.1.80

கணக்கப்பிரிவுப்பதவி

அரசு எம் அலுவலகத்திற்கு 7 புதுப்பதவிகள் தோற்று வித்துள்ளது. ஆயினும் கணக்கப் பிரிவிற்கேயன்றிச் சொற் றொகுப்புப் பிரிவிற்கு பெரும் பயன் இல்லை. கண்காணிப்பாளர் தமிழ்த்தட்டச்சாளர் இரு கடைநிலையூழியர் ஆகிய நால்வரும்

கணக்கப் பிரிவிற்குரியர்.

பேராசிரியர் சதாசிவம் கல்வெட்டுச் சொற்றொகுப்பாள ராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஆயின் அரசு இன்னும் இசைவு தரவில்லை. மருத்துவச் சொற்றொகுப்பாளர் பதவிக்குக் தக்கார் ஒருவரும் வரவில்லை.

மெய்ப்புத் திருத்தாளர் பதவிக்குப் பெருஞ்சித்திரனார் மகன் பூங்குன்றனைத் தெரிந்தெடுத்துள்ளோம். அவனுக்கும் அரசு இசைவு தரவேண்டும்.

கு.பூ. 14.1.80