உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




296

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

ஓட்டப்பிடாரம்

திரு. குமார. சுப்பிரமணியம்

அவர்களுக்கு

எழுதியவை

கால்டுவெல் ஐயர் திராவிட ஒப்பியல் இலக்கண முன்னுரையையும் சடகோபராமானுசாச்சாரியாரின் நன்னூற் காண்டிகையுரையில் நூலாசிரியர் வரலாற்றையும் பார்க்க.

அண்ணாமலை நகர் 22.7.59

அம்மை > அம்மான் = அம்மையின் உடன் பிறந்தவன் (தாய்மாமன்)

அந்தன்

=

தந்தை.

அத்தன் > அத்தை

தந்தையின் உடன் பிறந்தவள்.

அண்ணாமலை நகர் 6.11.59

வான்’, ‘ஒலி’ இரண்டும் தொன்றுதொட்டு வழங்கிவரும் தூய் தென் சொற்கள். Radio என்னும் ஆங்கிலச் சொற்கு நேர் தென்சொல்லாக அவை இரண்டையும் இணைத்தது சில்லாண்டுகட்கு முன்தான்.

சமற்கிருத தேவமொழி என்றும், பிராமணர் நிலத்தேவர் (பூசுரர்) என்றும் நம்பித் தமிழர் பகுத்தறிவிழந்து விட்டதனால் ஆரியச் சார்பான கட்சிக்காரர் எதைவேண்டுமெனினும் சொல்லலாம். 'வானொலி' வடசொல்லென்று சொல்லக் கேட்ட அவையோர் அமைதியாயிருந்ததே அவரின் பகுத்தற் வின்மைக்குப் போதிய சான்றாம்.

‘வான்’, ஒலி' இரண்டும் தொல்காப்பியத்திலும் உள்ளன. வான் + அம் = வானம்.

‘வான்' முகிலையும் மழையையும் வானத்தையும் குறிக்கும் தெலுங்கரும் மழையை ‘வானம்' என்பர்.

அண்ணாமலை நகர் 19.8. '59