உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

297

ன்று என் சம்பள வேலையும் வேறு வருவாயும் இன்றி யிருப்பதால் குறைந்த பக்கம் இருபது உருவா வேனும் விடுத்தால் தான் கட்டுரை யனுப்ப முடியும்.

காட்டுப்பாடி 10.10. '65

வெளிவரவேண்டி என் நூல்கள் ஏறத்தாழ முப்பது. அடுத்து வரவேண்டியவை : தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, திருக்குறள் தமிழ் மரபுரை என்பன. இவற்றுள் ஏதேனும் ஒன்றுக்குத் தங்கள் களக்காட்டு நண்பர் உதவலாம்.

ங்கில நூல் வெளியீட்டிற்கு ஏற்பாடு செய்கின்றார். பர்.மெ. சுந்தரம் அவர்கள். சில மாதங்கட்கு முன் சொன்னார்கள். அது தாங்கள் குறித்துள்ள கொடைவள்ளல் நினைவு மலர்க்குக் கருத்தின் போலும்.

கொடைவள்ளல் அரிராம் சேட்டு முக்கூடல் செக்கலால் ராம் சேட்டுக் குழும்பின் உரிமையாளர் என்று நினைக்கின்றேன். செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பதுபோல் இறந்தும் ஈந்தார் என்று கொள்ள வேண்டியிருக்கிறது.

காட்டுப்பாடி 13.11. '65

நாளை நின்று சென்னை சென்று பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் என்னும் நூலை அச்சிற்குக் கொடுக்கப் போகிறேன். பொருள் அதற்குதவியவர் திருச்சி மாவட்டத் தமிழன்பர்.

காட்டுப்பாடி 13.11. ‘65

The Primary Classical Language of the world (முதல் இலக்கியச் செம்மொழி) என்னும் ஆங்கில நூல் கால்டுவெலார் ஒப்பியல் இலக்கணம்போல் உலக முழுதும் பரவும். கொடை வள்ளல் சேட்டு புகழும் பரவும்.

நினைவு நூல் என்று குறிப்பது மட்டுமன்றி அவர் படமும் பொறிக்கப்பெறும். அவர் சிறப்புப் பண்புகளை எடுத்துக் காட்டும் ஓர் (தென்மொழி) மன்னைக் காஞ்சிப் பாவும் இயற்றிச் சேர்க்கப்படும்.

நூல் நூற்பதாண்டு ஆராய்ச்சியின் விளைவு. வரலாறு மொழிநூல் மாந்தனூல் ஆகிய முந்நூற் சான்றுகளொடு கூடியது. புதைந்து கிடக்கும் ஓர் அரும் பேருண்மையை உலகிற் கெடுத்துக் காட்டுவது. குல மத கட்சிச் சார்பற்றது. எவரும்