உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




298

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

மறுக்கொணாதது. தமிழின் தொன்மையையும் தமிழின் பெருமையையும் முதன் முதலாய் உலகுக்கறிவிப்பது. சுருங்கச் சொல்லின் தமிழே திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்னும் உண்மையை நாட்டுவது.

முடிக்கல் (Crown) அளவில் 500 பக்கமும் பகுதி அளவில் (Deny) 400 பக்கமும் வரும். ஈராயிரம் உருபாவிற்கு மேற்படாது.

எவ்வகையிலும் ஈராயிரத்திற்கு மேற்செல்லாதவாறு பார்த்துக்கொள்வேன். இயலுமாயின் ஆயிரத்தைந்நூற்றிற்குள்

முடிக்கப் பார்க்கிறேன்.

பொத்தக அளவு (Demy) அல்லது அரைய (Rayal) அளவாயிருக்கும். முடிக்கல் (Crown) அளவாயிருக்காது. அது மிகச் சிறிது. எழுத்து 10 அல்லது 11 புள்ளியாயிருக்கும். தாள் மேல்கரை (West Coast)26 சேர் (Pound) கொண்டது நல்லது. இவையெல்லாம் அச்சகத்தாருடன் கலந்து முடிவு செய்தல் வேண்டும்.

காட்டுப்பாடி 22.11. '65

இலத்தீன் கிரேக்கம் முதலிய ஆரிய மொழிகளிலுள்ள தமிழ்ச் சொற்களைத் துல்லியமாய்க் காட்டுதற்கு (a.i.u.I.o ஆகிய)நெடிற்குறியெழுத்துக்களும் u~nnivn h அல்லது k r, s, k முதலிய) மெய் மய் வேறுபாட்டுக்

b,

குறியெழுத்துக்களும் வேண்டும்.

இவை திரு. பூபதியார் அச்சகத்தில் இருப்பதும் இன்மை யும் தெரியவில்லை. இல்லாவிடின் உடனே சென்னை வார்ப் பகங்களில் வாங்கிக் கொள்ளல் வேண்டும். அதற்கிசையாவிடின் சென்னை அச்சகங்களுள் ஒன்றைத்தான் நாடவேண்டும். கூலி அதிகமாயினும் வேலை விரைந்து நடக்கும் அதற்குச் சின்னராசு அவர்கள் இசைவார்களா என்பது தெரியவில்லை. அவர்கள் தேர்விற்குப் பணம் கட்டிவிட்டதனால் ஒரு கவனமாய்ப் பழத்தலே நலம்.

தன்

மாழியாசிரியர் துரை மாணிக்கத்திற்கு இந்தி யெதிர்த்தது பற்றி 4 மாதம் கடுங்காவல் இங்குள்ள சிறைக் கோட்டத்திலிருக்கிறார்.

காட்டுப்பாடி 30.11. '65

திரு. கா. அப்பாத்துரை என் நெருங்கிய நண்பர்; என் னோடு ஒத்த கருத்தினர்; சிறந்த தமிழன்பர்.