உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

299

இரு கிழமைக்குமுன் இங்கு என் அறைக்கு அவரை வர வழைத்திருந்தேன். வந்தார். நம் ஆங்கில நூல் மெய்ப்புத் திருத்து மாறு கேட்டேன். இணங்கினார். ஆயின், அவர் தேனாம் பேட்டையில் இருப்பதாலும், இங்கு நாள்தொறும் வர உடல்நிலை இடந்தராமையாலும், நானே திருத்தின் சில சிறு மாற்றங்கள் அவ்வப்போது செய்ய வாய்ப்பிருப்பதனாலும் அவ்வேற்பாடு விடப்பட்டது.

நூல் வெளியிட இறந்த நாளினும் பிறந்த நாளே சிறந்ததாகும். ஆதலால் அம்முடிவு மிகப் பாராட்டத் தக்கதே. சென்னை 8 சுறவம் (தை) 1997