உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




300

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

என் தமிழ்த்தொண்டு இயன்றது

எங்ஙனம்?

(ஞா. தேவநேயன்)

ÿ

நான் வடார்க்காடு மாவட்ட ஆம்பூரில் மிசௌரி நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய (M.E.L.M.) நடுநிலைப் பள்ளியிற் படிப்பு முடிந்தபின், நெல்லை மாவட்டப் பாளையங் கோட்டையில் திருச்சைவ விடையூழியக் கூட்டரவு (C.M.S) உயிர்நிலைப்பள்ளியிற் பள்ளியிறுதிக் கடவைக்குச் சேர்ந்து, 4ஆம் படிவத்தில் பூத நூல் உடல் நூல் நிலைததிணை நூல் (Botany) தொகுதியையும், 5-ஆம் படிவத்தில் சுருக்கெழுத்து தட்டச்சு கணக்கு வைப்பு (Book-keeping) த் தொகுதியையும், 6- ஆம் படிவத்தில் வரலாறு தமிழ்த் தொகுதியையும், சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தேன். அன்று ஆங்கிலப் பற்றாள னாகவும் பேச்சாளனாகவும் மாணவர் (ஆங்கில) இலக்கிய மன்றச் செயலாளனாகவும் இருந்ததனால், ஆங்கில இலக்கியத்தைக் கரை காணவும், ஆக்கசுப் போர்டு (Oxford) என்னும் எருதந்துறையிற் பணி கொள்ளவும் விரும்பினே னாயினும்; இறுதியில் தமிழ் கற்றதினாலும், இசைப்பாட்டும் செய்யுளும் இயற்றி வந்ததனாலும், இசைத் தமிழ்ப் பித்தனான தனாலும் நான் அறியாவாறு இறைவன் என் மனப்பாங்கை மாற்றியதானாலும், நான் கற்ற ஆம்பூர்ப் பள்ளியிலேயே. அது உயர்நிலைப் பள்ளியாக வளர்ச்சியுற்றிருந்தபோது, உதவித் தமிழாசிரியனாக 1921 ஆம் ஆண்டில் அமர நேர்ந்தது. அதன் பின், அப்பதவிற்கும் தலைமைத் தமிழாசிரியப் பதவிக்கும் முழுத்தகுதி பெறுமாறு, 1924 ஆம் ஆண்டு மதுரைத் தமிழச்சங்கப் பண்டிதத் தேர்வெழுதித் தேறினேன். அதனால் எழுந்த செருக்கினாலும் தமிழ்வெறியினாலும், ஆங்கிலத்தை அறவே புறக்கணித்து நான் ஆங்கிலம் பேசக் கூடாதென்றும் பிறர் பேசின் செவி மடுக்கக் கூடாதென்றும், சூளிட்டுக் கொண்டேன். அம்மயக்குப் பத்தாண்டு தொடர்ந்தது. அதனால், தமிழாராய்ச்சியில் ஆழ முழுகித் தமிழின் அடிமட்டத்தைக்

ம்