உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




302

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

நூற்றுமேனி 15 விழுக்காடு உரிமைத் தொகையும் ஆண்டிற்கிரு முறை கணித்து ஒழுங்காக அனுப்பி வந்திருக்கின்றார்கள். இதனால், நான் ஒருபோதும் வெளியிட்டிருக்க முடியாத பல அரிய நூல்கள் வெளிவந்து என்பெயர் உண்ணாடும் வெளிநாடும் பரவியதுடன். என் தமிழ்த் தொண்டும் பன்மடங்கு சிறந்து வந்திருக்கின்றது.

அவர்கள் ஒப்பந்தப்படி டுத்துவந்த அரையாட்டைத் தொகை, என் குறைந்த சம்பளக் காலத்தும் வேலையில்லாக் காலத்தும் பெரிதும் உதவியதென்பதை நான் சொல்ல வேண்டுவதில்லை. அதோடு, அவ்வப்போது நான் 'செந்தமிழ்ச் செல்வி'க்கு, விடுத்த வேர்ச்சொல் பற்றிய என் உரிமைக் கட்டுரைகட்கும், அவர்கள் அளித்து வந்த அன்பளிப்புத் தொகை எனக்குப் பேருதவியாயிருந்ததென்பதைச் சொல்லாமலிருந்ததற்கில்லை.

இனி, அவர்கள் என் சொந்த வெளியீடான தமிழ் வரலாறு, வடமொழி வரலாறு, இந்தியால் தமிழ் எவ்வாறு கடும்? வண்ணனை மொழி நூலின் வழுவியல், திருக்குறள் தமிழ் மரபுரை என்னும் நூல்கள் அச்சானபோதும், எனக்கு மறைமலையடிகள் நூல் நிலையத்தில் தங்க இடந்தந்தும், இறுதிப் படிவ மெய்ப்புக்களையெல்லாம் மூலத்துடன் ஒப்பு நோக்கிப் பொறுத்தமையாகவும் செவ்வையாகவும் திருத்திக் கொடுத்தும், அச்சானவுடன் அழகாகக் குறித்த காலத்திற்குள் கட்டடம் செய்வித்தும். அனுப்பச் சொன்ன இடங்கட்கெல்லாம் தப்பாது அனுப்புவித்தும், வேண்டும் போதெல்லாம் வேண்டிய அளவு கடன் தந்துதவியும், பல்வேறு வகையிற் செய்துவந்த உதவியும் வேளாண்மையும் முற்றச் சொல்லுந் திறத்தவல்ல.

அவற்றுள் சிறப்பாக, அண்மையில் வெளிவந்த திருக்குறள் தமிழ் மரபுரைக்கு அவர்கள் திருத்தம், அச்சீடு, கட்டடம், விடுக்கை, கடன் கொடுப்பு ஆகிய ஐவகையிற் செய்த அரும் பேருதவிக்குத் தமிழுலகனைத்தும் என்றும் கடப்பாடுடைய தாகும். தங்கள் பல்துறைப் பணிகட்கிடையே இறுதிப்பதின் படிவங்களையும் மெய்ப்புத் திருத்தியதுடன், ஈற்றிருபடிவங் களைத் தங்கள் சொந்தப் பணியாட்களைக் கொண்டும் அடுக்குவித்து, ஒரு கிழமை வினையை ஒருநாட்குள் முடித்துப் பறம்புக்குடி உலகத்திழ்க் கழகத் திருவள்ளுவர் ஈராயிர ஆட்டை விழாவிற்கு நூறு படிகள் விடுத்துதவியது ஓரளவு இறும்பூதுச் செயலேயாகும். சுருங்கச் சொல்லின், 1968 நவம்பர் முதற்பகல் பாரி அச்சகத்தில் அச்சிடக் கொடுத்த என் திருக்குறள் தமிழ்