உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




310

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

நாங்கள் இருவரும் ஒரே யிடத்தில் இருப்பதால் தேன் அனுப்பின் இருவர்க்கும் அனுப்பவேண்டும். எனக்கனுப்பா விடின் குற்றமில்லை.

நீலமலை

க.பெ.சி. 25.5.77

ஆட்சிக்குழுக் கூட்டம் முடிந்த பின் நான் திரு. இளமாற னுடன் இன்று இங்கு வந்து (நீலமலை) குளிர்ச்சிக்காகத் தங்கியிருக்கின்றேன். இன்னும் ஒரு கிழமை இங்கிருப்பேன். அதற்கள்காட்டுப்பாடியிலும் வெப்பந் தணிந்துவிடும்.

பாராட்டு

க.பெ.சி; 10 அலவன் 2000

மாநாட்டில் உங்கட்குப் பாராட்டும் பட்டாடை போர்ப்பும் ஒரு நிகழ்ச்சியாகும். அது நிகழ்ச்சி நிரலிலும் குறிக்கப்பட்டு விட்டது. அது அச்சானவுடன் உங்கட்கு ஒருபடி வரும்.

கற்றதன் விளைவு

இர.மு.கி; 15.12.69

நும் அன்பான திருமுகம் பெருவண்மைப் பணவிடையும் பெற்றேன் நன்றி.

எனக்கு மூப்பைப் பற்றிக் கவலையில்லை. இறைவனருளால் என் நூல்களெல்லாம் வெளிவரும்வரை இவ்வுலகத்திலிருப் பேன். வடமொழியினின்று தமிழை மீட்கும் என் வாழ்க்கைக் குறிக்கோளும் இன்னும் மூவாண்டிற்குள் முற்றும் நிறை வேறிவிடும்.

ம்

இன்று என் கண்ணறுவை பற்றித்தான் கவலை. கடந்த அரைநூற்றாண்டாக அல்லும் பகலும் பல்துறை நூல்களைக் கற்று வந்ததன் விளைவு இது. ஈராண்டிற்கு முன் சென்னைத் தங்கசாலைத் தெருவிலுள்ள கண்ணறுவையர்சுப்பிரமணிய னாரிடம் இடக்கண் படல அறுவை செய்து கொண்டேன். இன்று வலக்கண்ணிற்கும் அவரிடம்தான் செய்து கொள்ள வேண்டும். முந்தின அறுவைக்கு 250 உருபா சென்றது. இன்றும் அவ்வளவுதான் செல்லும். ஒருகால் மருந்து கூடியிருப்பினும் 50 இதற்குமேற் போகாது.