உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

311

வலக்கண் படலம் பழுத்து வருகின்றது. இன்னும் ஒரு மாதத்திற்குள் பழுத்துவிடும். அதன்பின் உடனே அறுவை செய்து கொள்வேன்.

மருத்துவம்

க.பெ.சி; 16 விடை 2000

22 ஆம் பக்கல் ஆட்சிக் குழுக்கூட்டத்திற்கு வரவேண்டிய தில்லை. இதை நானே எழுதுவதற்கு இருந்தேன்.

வேனில் இன்னும், கழியாமையாலும் மழை பெய்யாமை யாலும் திருக்குறள் தமிழ் மரபுரை இன்னும் 400 குறளுக்கு எழுத வேண்டியிருப்பதானலும் கண்ணறுவையை ஒரு மாதம் பொறுத்துச் செய்து கொள்ள விரும்புகிறேன். நுமக்கும் தேன் மதி கழியட்டும்.

வெப்பநாளில் கண்ணறுவை செய்து கொள்ளின் எரிச்சல் எடுக்கும். நீர்வளமில்லாக் காலத்திற் சென்னை விடுதியில் தங்குவதும் ஏந்தாக விராது.

நீர் ன்று என்மகன் போலிருப்பதால் திருமணத்திற்கு வருகின்றேன். குறுக்கு அல்லது சுருக்கு வழி எது? எந்தப் புகைவண்டி நிலையத்தில் இறங்கவேண்டும்? இரவில் வழங்கு வதற்குப் போதிய கண்ணொளியின்மையாலும் தூக்கம் கெடாமைப் பொருட்டும் பகலில்தான வழிப்போக்கு வைத்துக் கொள்ளவேண்டும். ஆதலால் அரசினர்பேரியங்கியே. புகை வண்டியிலும் ஏந்தாகவிருக்கும். மதுரைப்பேரியங்கி யேறி அம்மை நாயக்கனூரில் இறங்கலாமா? அங்கிருந்து அரசினர் பேரியங்கியில்லாவிடினும் தனியார் பேரியங்கியாவது வத்தலக் குண்டிலாவது என்னை வரவேற்கத் தெரிந்த ஆள் காத்திருக்க வேண்டும்.

19ஆம் பக்கல் வருவேன். 21 ஆம் பக்கல் திருச்சிக் கூட்டத் திற்குத் திரும்புவேன்.

ஒரு மாதங்கழித்துக் கண்ணறுவையரைச் சென்னையில் கண்டு நாள் திட்டமானபின் அங்கிருந்து நுமக்குக் கம்பிச் செய்தி விடுப்பேன். நீர் உடனே வரலாம். உடன் மறுமொழி விடுக்க. க.பெ.சி. 9 ஆடவை 2000