உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




312

மருத்துவம்

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

கண்ணில் வலியிருக்கும்போது படிக்கக்கூடாது. இது வேனிற்கால மாதலால் வெயில் நேரத்தில் வெளியே செல்லவுங் கூடாது. விளக்கொளியைப் பார்ப்பதும் நீண்ட நேரம் கண் விழித்திருப்பதும் கூடா. திரைப்படத்தைப் பார்க்கவே கூடாது. சூடும் பித்தம் ஊதையும் (வாயுவும்) விளைக்கும் உணவுப் பொருள்களை முற்றும் விலக்கி விடவேண்டும். நாள்தொறும் தண்ணீற் குளித்து அறிவன் காரிய நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்துக் குளித்திட வருக. குளம்பியை (காப்பியை) நிறுத்தி விட்டு மோர், பதநீர், இளநீர் முதலிய தன்குடியையே பருகி வருக. பழையதம் தயிர்ச்சோறும் உண்டு வருவது நன்று. எலுமிச்சஞ் சாற்றைக் கலந்து தேய்த்துக் குளிக்கலாம். சீனி சேர்த்துக் குடிக்கலாம். நுங்கு, கொடிமுந்திரி, வெள்ளரிப்பழம் முதலியன உண்ணலாம். காலிமுள்ளங்கி (Car- rot) கண்ணிற்கு நன்றென்பர். அதை அடிக்கடி சமைத்துண்க. 'Optrex என்றொரு கண்கழுவி நீர் ஆங்கில மருந்துக் கடை களில் கிடைக்கும். அதை வாங்கி நாள்தொறும் இருவேளை கண்கழுவி வரலாம்.

நண்பகலில் தலையை (மண்டையை)க் குளிர்ந்த துணியால் மூடிக் கொள்க.

தமிழர் வரலாறு எழுதி வருகின்றேன்.

எதற்கும் வீண் கவலை கொள்ளற்க.

க.பெ.சி; 10 மீனம் 2001

நாட்பட்ட புண்ணை நாட்டு மருத்துவக் களிம்பே விரைந்தாற்றும்.

க.பெ.சி; 20 கன்னி 2002

குழந்தை நலம்

குழந்தைகள் மேனி மென்மையாயும் உடம்பு நொய்ம்மை யாயும் இருப்பதால், தட்ப வெப்ப நிலை மாறினும், தாயுணவு தகாவிடினும், நெடுந்தொலைவழிச் செல்லினும், தீய நாற்றம் வரினும், முரட்டுத்தனமாய்த் தூக்கினும் நெடுநேரம் உடம்பு அசைவுறினும் ஊட்டக்குன்றினும், உடைகாலநிலைக்கொவ்வா விடினும் எளிதாய்நோய் தாக்கும்.