உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

313

குழந்தை நலம் பேணுவதில், பின் மருந்தினம் முன்தடுப்பே எல்லா வகையிலும் ஏற்றதாகும். தாய்ப்பாலுண்ணும் குழவிக்கும், குழந்தைக்கும் தாய் தன் உணவைச் சரிப்படுத்திக் கொள்வதே நோய் தடுக்கும் சிறந்த முறை.

குழவிக்கு மார்ச்சளியிருக்கும்போது தாய் குளிர்ச்சியான உணவை உண்ணக்கூடாது. முந்திரிச்சாறு (பிராந்தி) ஒரு சில துளிகளில் நீர்கலந்து உறை மருந்துபோல் கொடுக்கலாம். குழந்தை மருத்துவத்தில் அல்லது வளர்ப்பில் தேர்ச்சி பெற்ற மூதாட்டியார் அல்லது மருத்துவர் ஒருவரைத் துணைக் கொள்வது நல்லது. இறைவன் திருவருளை வேண்டுவதும் இன்றியமையாதது. ஆறு மாதம் முடியும் வர மிகக் கண்ணுங் கருத்துமாகப் பேணிக்காத்தல் வேண்டும்.

பூவைப்போல் தொடவும் பொன்னைப் போற் போற்றவும் புத்தேள் (தெய்வம்) போல் தூய இடத்தல் வைக்கவும் வேண்டும். வருகின்ற வேனிற்கு நானும் பெருஞ்சித்திரனாரும் வால் பாறை செல்வோம். திரும்புகாலில் இயலுமாயின் கல்லை வருவோம்.

செ.சொ.பி.பே.அ. வேலை தொடங்கிவிட்டேன். கல்லைப் பக்கம் சிறப்பாக ஏதேனும் சொல்வழங்கின் பொருளுடன் தெரிவிக்க.

மருத்துவம்

க.பெ.சி. ; மீனம் 2002 (18.3.71)

திரு. நித்தலின்பனார் நுங்கள் அன்பளிப்பு முடங்கல் திணர் ஆறு கொண்டு வந்து கொடுத்தார். நன்றி.

மஞ்சட் காமாலைக் காக்கை கறி நன்மருந்தென்பர். அதை மறைவாகச் சமைத்துக் கொடுத்தல் வேண்டும். திருச்சித் திரு. வெள்ளிமலையாரம் சென்ற ஆண்டு அந்நோயால் வருந்திப் பின்னர் மருத்துவம் பெற்று நலமடைந்தார். அவரையம் வினவி யறிதல் வேண்டும்.

நோய் நீக்கத்தினும் நோய்த் தடுப்பே சிறந்ததாதலின் நோய் முதல் நாடி அது மீண்டும் நேராதவாறு முதற்காப்பாயிருந்து கொள்க. அடுப்பெரிக்கவும் அம்மியரைக்கவும் உடனே ஒரு தக்க பெண்ணை அமர்த்திக் கொள்க. காயச்சரக்கு (மல்லி சீரகம்) அரைப்பதும் மாவாட்டுவதும் கடிய வேலை.