உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




314

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

மாலை 8 மணிக்கு நீங்கள் திரும்பாவிடினும் தப்பாது உண்டு விடச் சொல்க.

இரா.மு.கி; 30.1.70.

குறிஞ்சி

குறிஞ்சியில் ஈராண்டிற் கொருமுறையும், நாலாண்டிற் கொருமுறையும் ஆறாண்டிற்கொருமுறையும் பன்னீராண்டிற் கொருமுறையுமாகப் பூக்கும் நால்வகை யுண்டெனச் சென்ற ஆண்டு ஏர்க்காட்டுப் பயிர்த்தொழில் அலுவலர் சொல்ல அறிந்தேன். பத்தாண்டிற்கொருமுறை பூப்பதும் உண் னின், மொத்தம் ஐவகை உண்டெனக் கொள்ளல்வேண்டும்.

குடந்தை விழாப்போல் பன்னீராண்டிற்கொருமுறை பூக்கும் வகையொன்று இருத்தலாலேயே, அது மாமாங்கம் (மகாமகம்) செடி என்ற பெயர் பெற்றுள்ளது அப்பெயரே ஏர்காட்டுப் பொதுமக்களிடம் வழங்குகின்றது. முந்தின பூப்பு 12 ண்டிற்கு முன் நிகழ்ந்ததாகச் செய்தித்தாளிலும் ஒருவர் எழுதியிருந்தார்.

மாறாட்டுச் சமையத்தில் ஒரு செடி பூப்பதாயிருந்தாலும் பார்த்தல் நன்றே.

எனக்கு நாற்புதல்வரும் ஒரு புதல்வியும் ஐவர் மக்கள்.

மூத்தவன் கொடுமுடியிலும் அடுத்தவன் சேலத்திலும் மூன்றாமவன் சென்னையிலும் கடையன் காட்டுப்பாடியிலும் இருக்கின்றனர். மகள் இங்கிருக்கிறாள் (சென்னை.)

எருதந்துறை

க.பெ.சி; நளி 2000

நன்றியுரைப் பாட்டில் யோமண, தேய என்பவற்றை யேர்மண, நேய என்று திருத்திக் கொள்க.

தான் இதனினும் பெரிய பொத்தகம் எழுதத்தக்க பெரியோனாவான் என்று நக்கீரனுக்குச் சொல்க. எருதந்துறை வாணர் வியக்குமாறு ஆங்கிலப் பேச்சில் தேர்ச்சி பெற வேண்டு மென்று ஊக்குக.

அம்மையார் நாள்தொறும் பன்மடி உயிரியல் மாத்திரை உட்கொண்டு வருகின்றாரா? நன்கொடையாகவும் வந்ததனால்