உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

315

உரையை

அதன் அருமையை அறியாதிருக்கலாம். தி.த.ம. ஒழுங்காகப் படித்து வரச்சொல்க. நாள்தொறும் பிற்பகலில் படிப்பிற்கென்று ஒருமணி நேரம் ஒதுக்கி வைக்கவேண்டும். மெய்வருத்த வினைகட்கெல்லாம் வேலைக்காரி அமர்த்திக் கொள்க. நீங்களும் இனிமேல் பிற்பகல் வேலை முடிந்தவுடன் வீடு திருப்பி விடுவது நன்று.

மாலை 8 மணிக்கே அம்மையாரும் நுங்களுடன் மேசைப் படைப்புண்டு பழகவேண்டும். எருதந் துறையில் சமையற்காரன் அல்லது பரிமாறி மேசைமேற்படைக்க நாம் ஐவோமும் ஒருங்கே தான் உண்ணவேண்டியிருக்கும். இற்றையுலகியலறியாமை, அடிமைத்தனவுணர்ச்சி, கூச்சம், வாய்வாளாமை ஆகிய குற்றங் குறைகள் படிப்படியாக நீங்கிடவேண்டும். அடுத்த ஆண்டு திடுமென்று புறப்பட நேரலாம். அதற்குள் முழுத் தகுதிப் படுத்திக் கொண்டு அணியமாயிக்க.

நக்கீரனுக்குச் சொன்னதே இறைவிக்கும்.

எதுவும் நிகழும் வரை முழுவுறுதியன்றாகலானும் அன்பிலார் அறியின் அழுக்காறு கொள்ள நேருமாதலானும் நம் கனவு நனவாகும் வரை அடக்கவொடுக்கமாகவும் இருக்க. இறைவன் அருள்க.

இரா.மு.கி. 7 சுறவம் 2000

பேராயம்

இந்தியப் பேராயம் (Indian National Congress) இயூம் (A.O. Hume) என்னும் ஆங்கிலப் பெருமானால் 1885 டிசம்பர் 28ஆம் பக்கல், நண்பகல் 12 மணிக்குப் பம்பாயில் கோகுலதாசு தேசுப் பால் சமற்கிருதக் கல்லூரிக் கூடத்தில் கூட்டப்பட்டது. பொன்னர்சி (W.C. Bonnerjee) என்னும் வங்க இந்தியர் தலைமை தாங்கினன். இயூம் என்பவர் சிமிலாவில் (Simila) இருந்த ஓர் அரசியல் அதிகாரி. வங்கம், பம்பாய், சென்னை ஆகியமும் மண்டலங்களினின்றும் ஆங்கில மறிந்த இந்தியப் பெருமக்கள்

கூடினர்.

இந்தியத் தேசிய முன்னேற்றத்தில் நன்னோக்கங்கொண்ட இந்தியப் பெருமக்களெல்லாம் ஆண்டிற்கொருமுறை ஒரு பெருநகரிற் கூடி, இந்தியர் முன்னேற்றம் ஆட்சியில் திருத்தம் ஆகியவற்றிற்கு விதிவகைகளை வகுத்து அவற்றை நிறைவேற்று