உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




316

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

வதே பேராயத்தின் குறிக்கோளாக முதற்கண் இருந்தது. இதற்கு அக்காலத்துத் துணையரையர் (Viceray) டப்பெரின் பிரபுவும் (Marquis of Dufferin) இசைவும் வாழ்த்தும் அளித்திருந்தார்.

பகை

ஆயின் நாளடைவில் பல இந்தியர்க்கு ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்னும் ஆசை உண்டாய்விட்டது. அதனாலேயே ஆங்கில அரசு இவ்வியக்கத்திற்குப் யாயிற்று. முதலில் மட்டாளரும் (Moderates) முனைவாளரும் (Extremists) இருசார் பேராயத்தார் இருந்தனர். சாலியன் வாலாபாக் என்னுமிடத்தில் நடந்த பஞ்சாபுப் படுகொலையின் பின் மட்டாளரும் முனைவாளாராகிவிட்டனர். பேராய எதிர்ப்பு வலுத்தது.

தமிழ்நாட்டில் நயன்மைக் கட்சி (Justice Party) தோன்றிப் பதினோராண்டு ஆண்டது. நூற்றிற்கு மூவரான பிராமணர்க்கு நூற்றிற்கு மூன்றே அரசியல் அலுவல் என்று சட்டமானபின் பிராமணரெல்லாரும் ஒன்றுகூடி எல்லா வகுப்பாரையும் படிக்க வைத்து முன்னேற்றிப் பதவியளித்த ஆங்கில அரசை நீக்கின லன்றி நயன்மைக் கட்சியை வீழ்த்த முடியாதென்று கண்டு பேராய இயக்கத்தைத் தமிழ்நாட்டிற் புகுத்தி முனைந்து வளர்த்தனர்.

னா

நயன்மைக் கட்சித் தலைவர் நாட்டு மொழிகளைப் புறக்கணித்து, ஆங்கிலத்தையே போற்றியதாலும் பொதுமக்கள் தொடர்பு இன்மையாலும் ஆங்கிலவரைச் சார்ந்ததனாலும் இறுதியில் தோல்வியடைந்தார்.

பேராயத்தில் தமிழர் பெரும்பான்மையராயிருந்தாலும் தலைவர் பிராமணராகவே யிருந்ததனால் தமிழர் தலைவர் காட்டிக் கொடுக்கும் தனனலக்காரராகவேயிருந்து வி ட்டனர். ஆங்கிலத்தை ஒழித்து இந்தியைத் திணிப்பதில் இருவகைப் பேராயமும் ஒன்றே. ஆதலால் இரண்டும் தமிழகத்திற்குக் கேடு விளைவிக்கும்.

அச்சகம்

க.பெ.சி. 30 சுறவம் 2002 (12.2.71)

திருக்குறள் தமிழ் மரபுரை மெய்ப்புத் திருத்தப் பெரும் புலவர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்களைத் தம் சொந்தச்செலவில் அமர்த்துவதாகவும் அவர் இசையா விடின் தாமே அவ்வேலையை மேற்கொள்வதாகவும்