உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

317

பேரா. கோ. நிலவழகனார் (இராமச்சந்திரன், எம்.ஏ., தலைமைத் தமிழாசிரியரும் துணைவேந்தரும், பச்சையப்பன் கல்லூரி, காஞ்சி) எழுதியிருக்கின்றார். நானும் உடம்பட்டேன்.

நானே திருத்தின் புதிதாய்த் தோன்றும் கருத்துக்களையும் சேர்க்கலாம் என்பது மெய்யே. ஆயின் இன்னம் 400 குறள்கட்கு உரை 5 வரையை வேண்டியுள்ளது. அதை யெழுதுவதில் ஈடுபட்டுள்ளேன். அதற்கு வேண்டிய நூல்கள் இங்குத்தான்

உள்ளன.

சென்ற பனிக்காலத்தில் ஈமுளை தாக்கியிருந்ததால் உரைமுன்பே முடியாது போயிற்று. இன்னும்., முதுவேனில் வெப்பத்தால் விரைந்து வேலை செய்ய முடியவில்லை. வலக்கண் படலம் பழுத்து வருகின்றது. விரைந்து அறுவை செய்து கொள்ளவேண்டும்.

சிறந்த அச்சகமெல்லாம் ஆரியரிடம் உள்ளன. ஆயின், ஆரியத்தை யெதிர்க்கும் நம் நூல்களை அவரிடம் கொடுக்க அச்சமாயிருக்கின்றது. கூலி போனாலும் போகின்ற தென்று தீ வைத்து விட்டால் என்ன செய்வது? ஓராண்டு அரும்பாடு பட்டுச் செய்த வேலை வீணாய்ப் போம். மீண்டும், எழுதுவதும் அத்துணை எளிதன்று. ஆகவே, ஆரியர் அச்சகமெல்லாம் நமக்கு அச்சகமே.

பெருக்குவில்லை கூடிய கண்ணாடித் துணையால் எழுதியதால் இத்துணைச் சிறிதாக எழுத முடிந்தது.

புதுமெய்ப்பு

இரா.மு. கி; 2000 21.6.99

முந்தா நாள் தான் 21 ஆம் படிவத்தைத் திருத்தி யனுப்பினேன். நேற்று அச்சகம் சேர்ந்திருக்கும். ஆயின், இன்றைக்கும் அதே படிவம் ஒரு பிழையும் திருத்தப் பெறாமலும் சில புதுப் பிழைகளுடனும் புதுமெய்ப்பாக வந்துள்ளது. இது காலத்தைக் கடத்தும் சூழ்ச்சியாகவோ மூளையில்லாத அச்சுக் கோப்பாளரின் வேலையாகவோ இருத்தல் வேண்டும். முந்தாநாள் விடுத்தது சேராவிடினும் முந்தியெடுக்கப்பட்டிருந்த தொடர் இப்புது மெய்ப்பில் நீக்கப்பட்டிருப்பதற்குக் கரணியம் தெரியவில்லை.

இரா.மு.கி; 8.8.69