உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




342

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

திருமண வாழ்த்துப்பா (நேரிசையாசிரியம்)

16. மங்கலந் தங்கும் மனையறம் மருவும்

ஓருயி ரெனவே ஒன்றிய காதலில் பல்வகைச் செல்வமும் பாங்கா யுதவ இம்மையின் இன்பத் தெல்லை கண்டே ஏனையர்க் கெல்லாம் இயல்வரை உதவி உற்றோர் மகிழவும் மற்றோர் புகழவும் வள்ளுவன் நெறியும் தெள்ளிய தமிழும் மாநிலம் எங்கணும் பரவ

வாழியர் நன்கு வையகம் நெடிதே -த,தி. 80 மங்கலம்

17. போற்றும் தமிழ்க்காவற் பொன்னுச் சுவாமியரும் ஆற்றுஞ் சகுந்தலை அம்மையரும் - ஏற்ற நகர்க்காவ லோடு நலவறங் காத்து நிகர்க்காமல் நீட நிலம்.

..........மங்கலம் 1. 4. 45

திரு. பொன்னுச்சாமி அவர்கள் காவல்துறை.

நலவறம் - நலம்பயக்கும் அறங்கள்;

நிகர்க்காமல் -ஒப்பு இல்லாமல்

கலியாண சுந்தரம் வடிவழகி திருமண வாழ்த்து

18. கலியாண சுந்தரஞ்சேர் காதல்வடி வழகியம்மை

புலியாணம் ஒன்றாகிப் பொருவரிய இன்பந்துய்த் தொலியான நன்மக்கள் உலகுவப்பப் பெற்றுமனை மலியாணர் வரநீடு மாநிலத்து வாழியரோ.

செ. செ. 30: 506 11.6.56

புலியாணம் ஒன்றாகி - உண்ணாக்கும் மேல்நாக்கும் போல் ஒன்றுபட்டு; ஒலியாணம் புகழும் அழகும்; மலியாணர் - மிகுந்த புதுவருவாய்.

-