உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

170. தொல்காப் பியப்பகுதித் தொல்லுரையும் ஒண்குறளின் மல்கா வுரையொன்றும் மாண்டமிழ்க்கே - அல்காத்த இன்னிலைப் புத்துரையும் ஏனைப் பதிப்புகளும் துன்னிய வ.உ.சி. தொண்டு.

371

வ.உ. சிதம்பரனார் நூற்றாண்டு விழா மலர் -செ.செ. 47: 40

மறைமலையடிகள்

பல்துறை யாற்றற் பதிகம்

1. பேராசிரியர்

171. நூலும் நுவல்வும் நுணங்குரையும் நன்பதிப்பும் சாலும் இதழும் சமமாக - மேலுயர்வுப் பேரா சிரியர் பெரும்பேர் மறைமலையார் நேரா ருளரிந் நிலத்து.

2. பெரும்புலவர்

172. தொல்காப் பியமுதலாந் தொன்னூலும் பின்னூலும் பல்காற் றனிப்பாடல் பட்டயமும் - ஒல்காப் பெரும்புலவ ருக்கும் பெரியார் தனியே அரும்பொன் மறைமலை யார்.

3. பாவலர்

173. உரைநடையும் பாவும் ஒருங்கே சிறந்த

விரைவுடையார் சில்லோர் வியன்பார் - மறைமலையார் செம்மைப் பொருளணிசேர் செய்யுள் திருவொற்றி மும்மணிக் கோவை முறை.

4. ஆராய்ச்சியாளர்

174. நுண்மதி கல்வி நுடங்காத் தறுகண்மை

நண்ணிலை மன்னலம் நல்வாய்மை - திண்முயற்சி சாலுமா ராய்ச்சிச் சதுரர் மறைமலையார் பாலையும் முல்லையும் பார்.